Connect with us

இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2023 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan Tamil, Today Rasipalan, Today Rasipalan www.tamizhakam.com, இன்றைய ராசிபலன், இன்றைய ராசிபலன் www.tamizhakam.com, இன்றைய ராசிபலன் தமிழ்

Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2023 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil :இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2023 வெள்ளிக்கிழமை.உலகில் பல பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் ஜோதிடத்தை முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கணித்து தருவதில் ஜோதிடர்கள் மிக முக்கிய பணியை செய்தி செய்கிறார்கள் எனினும் இந்த ஜோதிடத்திற்கு எந்தவிதமான அறிவியல் அடிப்படையில் இல்லை என்பது பலரது கூற்றாக உள்ளது.அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

mesham rasi palan today | mesham rasi palan today in tamil

மேஷ ராசி அன்பர்களே இன்று மகிழ்ச்சிக்குரிய வகையில் எந்த ஒரு நிகழ்வுகளும் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே அமைதியாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லது. ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும் என்பதால் இன்றைய நாளை நீங்கள் ஆன்மீகத்தில் செலவு செய்து மகிழ்ச்சி அடையலாம்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் முன்னேற்றம் குறைவாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருப்பதால் தொழிலில் சற்று சுணக்கமான நிலை நிலவுகிறது.

 நிதிநிலைமையை பொறுத்தவரை இன்று சிறப்பான நாள் இல்லை. எதிர்கால தேவைக்காக பணத்தை சேமிப்பது மிகவும் சிறப்பானது என்பதை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை கண்களில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் கண் சம்பந்தமான வியாதிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி விடுங்கள்.

ரிஷபம்

risabam rasi palan today | risabam rasi palan today in tamil

ரிஷப ராசி அன்பர்களே இன்று வேடிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக இருக்கும். மொத்தத்தில் இந்த நாளை நீங்கள் மகிழ்ச்சிகரமாக கொண்டாடுவீர்கள்.

 தொழிலைப் பொறுத்தவரை உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள் .தன்னம்பிக்கையோடு செயல்படும் உங்களுக்கு மேல் அதிகாரிகளிடமிருந்து பாராட்டு மழை வந்து குவியும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை மகிழ்ச்சிகரமாகவும் சாதகமாகவும் இருப்பதால் பணத்தை சேமிக்க கூடிய முயற்சிகளில் நீங்கள் ஈடுபடுவீர்கள்.

 ஆரோக்கியமும் நேர்மறையான எண்ணத்தின் காரணமாக ஆற்றல் அதிகரித்து காணப்படுவதால் ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். இந்த நாள் உங்களது நாளாக உள்ளது என்பதால் தைரியமாக செயல்படவும்.

மிதுனம்

midhunam rasi palan today | midhunam rasi palan today in tamil

மிதுன ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமைந்துள்ளதால் நீங்கள் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலையில் தான் இருக்கிறீர்கள். எனினும் இந்த சூழ்நிலையை நீங்கள் அமைதியாக கையாளுவதின் மூலம் மிக நல்ல பலன்களை பெற பெற முடியும்.மேலும் அனுசரணையாக அனைவரிடமும் நடந்து கொள்ளுங்கள் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.

 தொழிலை பொருத்தவரை தொழிற் ஸ்தானத்தில் நீங்கள் திருப்தியை அளிக்க கூடிய வகையில் செயல்படுவீர்கள். குறைந்த  முயற்சியில் நிறைவான வெற்றியை பெறக்கூடிய சூழ்நிலை தொழிலில் உள்ளது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பண செலவை குடும்பத்துக்காக அதிகம் செய்வீர்கள். இதனால் சேமிப்பது கடினமாகி கையில் இருக்கும் பணம் சற்று செலவாகும். எனவே அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை கை கால்களில் வலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இதனை சரி செய்ய தினமும் சிறிது நேரம் ஆவது உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக நீங்கள் பராமரிக்க முடியும்.

கடகம்

kadagam rasi palan today | kadagam rasi palan today in tamil

கடக ராசி அன்பர்களே இன்று எல்லா விஷயத்தையும் நீங்கள் சகஜமாக எடுத்துக் கொண்டால் நன்மைகள் அதிகம் ஏற்படும். எதையும் பொறுமையோடும் அமைதியோடும் கையாள வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை முன்னேற்றம் நிச்சயமாக உண்டு. உங்கள் பணிகளை திறம்பட செய்ய புதிய அணுகுமுறைகளை நீங்கள் மேற்கொள்வீர்கள். அதில் வெற்றியும் பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதையும் படிங்க :  இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2023 புதன்கிழமை - Today Rasi Palan in Tamil

 நிதி நிலைமையை பொறுத்தவரை நிதி வளர்ச்சி சிறப்பாக இல்லை. எனவே எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருந்தாலும் அதற்குரிய பணம் இல்லாததால் மன உளைச்சல் ஏற்படும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தொண்டை வலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் குளிர்ச்சியான உணவுகளை உண்ண  வேண்டாம்.மேலும் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் கண்ணும் கருத்துமாக இருக்கவும்.

சிம்மம்

simmam rasi palan today | simmam rasi palan today in tamil

சிம்ம ராசி நேயர்களே இன்று நேர்மறையான ஒத்துப்போகும் மனநிலை காணப்படும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும். இந்த நாள் உங்களுக்கு சுமாரான நாளாக இருந்தாலும் நீங்கள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணி செய்யும் இடத்தில் பலவிதமான சூழ்நிலைகள் கலந்து காணப்படுவதால் பலன்களும் பலவிதமாகவே உள்ளது.பணியில் நீங்கள் திறம்பட செயலாற்ற வேண்டும் அதுமட்டுமல்லாமல் பணியில் கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது.

நிதி நிலைமையை பொறுத்தவரை வரவும் செலவும் கலந்து காணப்படும்.எனவே திட்டமிட்டு பணத்தை செலவு செய்வது அவசியம் ஆகும்.ஆரோக்கியத்தை பொருத்தவரை முதுகு வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. உங்கள் பதட்டத்தை குறைத்து ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்கவும்.

கன்னி

kanni rasi palan today | kanni rasi palan today in tamil

கன்னி ராசி அன்பர்களே நீங்கள் விழிப்புணர்வை கடைப்பிடிக்க வேண்டிய நாள். இன்று உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏதாவது நடக்க திட்டமிட்டு இருந்தால் அதை தள்ளிப் போடுவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று மும்முரமாக பணியை மேற்கொள்ள கூடிய நாள். சிறந்த செயல் திறனுக்கு ஏற்ப நீங்கள் வெற்றிகளை பெற முடியும். கூடுதல் முயற்சிகள் எடுத்தால் பணி சிறப்பாக நடக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை வளர்ச்சி ஸ்திரமாக இருக்காது உங்கள் பணம் வீணாகாமல் இருக்க சாதுரியமாக செலவுகளை நீங்கள் செய்வது அவசியமாகும்.

 ஆரோக்கியமும் இன்று பிரச்சனையாக தான் உள்ளது. ஒவ்வாமை காரணமாக தொண்டை வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் ஆரோக்கியத்தை கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

துலாம்

thulam rasi palan today | thulam rasi palan today in tamil

துலாம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சாதகமான நாளாக உள்ளதால் எல்லா பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் முயற்சிக்கு நல்ல வெற்றிகள் கிடைக்கும் என்பதால் இன்றைய நாள் உங்களுக்கு பொன்னான நாள் என்று கூறலாம்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணி செய்யக்கூடிய இடத்தில் சிறப்பான சூழ்நிலை நிலவுவதால் உங்களுக்கு சாதகமான பலன்கள் மட்டுமே கிடைக்கும். தொழிலில் திருப்தி நிலவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று வளர்ச்சி சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத பண வரவுகள் உங்களுக்கு வந்து சேரும். அதுபோல ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

 உற்சாகத்தோடும் உறுதியோடும் நீங்கள் செயல்பட இன்று சிறப்பாக இருப்பதால் கட்டாயம் இந்த நாளை உங்களது நாளாக மாற்றிக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தை பற்றி அச்சம் தேவையில்லை.

விருச்சிகம்

viruchigam rasi palan today | viruchigam rasi palan today in tamil

விருச்சிக ராசி நேயர்களே இன்று நீங்கள் ஏற்படும் விளைவுகளை எண்ணி வருதப்படுவதை விட அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. அதிர்ஷ்டமற்ற நிலையை நீங்கள் சமாளிக்க வேண்டி இருப்பதால் உறுதியோடும் நம்பிக்கையோடும் இருங்கள். உங்களுக்கு நிச்சயம் நன்மை நடக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இது உங்களுக்கு மகிழ்ச்சியை தராது. பயணத்தின் போது தேவையற்ற பதட்டம் ஏற்படும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பண இழப்பிற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது. எனவே பணத்தை கையாளும்போது கூடுதல் கவனத்தோடு கையாளுவது சிறப்பாக இருக்கும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை நீங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க வேண்டுமென்றால் நம்பிக்கையோடு இருங்கள். கை கால்களில் வலி ஏற்பட வாய்ப்பிருப்பதால் சற்று கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது.

இதையும் படிங்க :  இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2023 திங்கட்கிழமை - Today Rasi Palan in Tamil

தனுசு

Dhanusu rasi palan today | Dhanusu rasi palan today in tamil

தனுசு ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மிகச்சிறந்த நாளாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் அமைதியை கையாளுவது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நேர்மறையான எண்ணங்களை உங்களுக்குள் வளர்த்துக் கொள்வதின் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை திறமையாக ஆற்ற நீங்கள் சில சௌரியங்களை விட்டுக் கொடுக்க நேரிடும். எனவே நீங்கள் தொழிலில் கவனத்தை செலுத்துவது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று அவ்வளவு சுபிட்சமாக இல்லை என்று தான் கூற வேண்டும். குடும்பத்திற்காக செலவுகள் செய்ய வேண்டி இருப்பதால் கையிருப்பு குறைவதற்கான வாய்ப்புகள் அதிக அளவு உள்ளது.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் பன்மடங்கு உயர்ந்திருக்கும். பாதுகாப்பின்மை உணர்வு அடிக்கடி உங்களுக்குள் ஏற்படும். அதை தவிர்த்து விட்டால் உங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படாது.

மகரம்

magaram rasi palan today | magaram rasi palan today in tamil

மகர ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக உள்ளதால் நிச்சயம் இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கடினமான பணிகளை நீங்கள் இன்று மிக சுலபமாக முடித்து விடுவீர்கள். எனவே உங்கள் லட்சியங்களை இன்று அடைவதற்கான சிறந்த நாளாக உள்ளது.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை திருப்தியான சூழ்நிலை நிலவுவதால் உங்கள் திறமையை வெளிப்படுத்தி மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவதற்கான அமைப்பு நிறையவே உள்ளது. எனவே தொழிலை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.

 நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம் காணப்படுவதால் சீரான நிதி உங்கள் கையில் இருக்கும். எனவே நீங்கள் சிக்கனமான முறையில் உங்களது சேமிப்பை உயர்த்த என்ன செய்யலாம் என்பதை சிந்தியுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்தவிதமான சுணக்கமும் இல்லை. இன்று ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருப்பதால் நீங்கள் ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கும்பம்

kumbam rasi palan today | kumbam rasi palan today in tamil

கும்ப ராசி அன்பர்களே இன்று நல்ல மாற்றங்கள் ஏற்படும். வருகின்ற வாய்ப்புகளை முறையாக பயன்படுத்துவதின் மூலம் நீங்கள் பலவிதமான நன்மைகளை எளிதில் பெற முடியும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிமாற்றம், இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு பயணம் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலையும் நிலவுகிறது. எனினும் இந்த பயணத்தில் உங்களுக்கு வெற்றியும் பாராட்டும் கிடைக்கும் என்பது உறுதி.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று பலன்கள் கலந்து காணப்படும். வரவு செலவு இரண்டுமே ஒன்றாக இருப்பதால் பணத்தை கவனமாக கையாளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று எந்த விதமான குறைபாடும் இல்லை. சிறந்த முறையில் ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

மீனம்

meenam rasi palan today | meenam rasi palan today in tamil

மீன ராசி அன்பர்களே இன்று ஒழுக்கமான வாழ்வு உங்களுக்கு வெற்றியை பெற்று தரும். உங்கள் நம்பிக்கை உயர்ந்து இருப்பதால் நல்ல உறுதியோடு அனைத்து செயல்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை கடின உழைப்புக்கு பதவி உயர்வு கிடைக்கும். முறையாக திட்டமிட்டு தொழிலில் பணியை செய்வதின் மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழிலில் சுறுசுறுப்பு அதிகரித்து காணப்படும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை சுதந்திரமாக நீங்கள் முடிவெடுக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. சேமிப்பு உயரும் பயனுள்ள புதிய முதலீட்டுகளில் உங்கள் பணத்தை சேமிக்க திட்டமிடுவீர்கள்.

 ஆரோக்கியம் என்று ஆற்றலோடு அதிகரித்து காணப்படும். எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். சிறப்பான ஆரோக்கியமான நாளாக இருந்தன அமைந்துள்ளது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top