Connect with us

இன்றைய ராசிபலன் 25 பிப்ரவரி 2023 சனிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan Tamil, Today Rasipalan, Today Rasipalan www.tamizhakam.com, இன்றைய ராசிபலன், இன்றைய ராசிபலன் www.tamizhakam.com, இன்றைய ராசிபலன் தமிழ்

Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 25 பிப்ரவரி 2023 சனிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 25 பிப்ரவரி   2023 சனிக்கிழமை. மனிதன் தன் வாழ்க்கையில் உயர்ந்த லட்சியங்களை கொண்டு அதை அடைவதற்காக எண்ணற்ற வழிகளில் முயற்சி செய்து வருகிறார். அவ்வாறு முயற்சி செய்யும்போது சில சமயங்கள் வெற்றிகளையும், தோல்விகளையும் சந்திப்பது இயல்புதான்.

 அதுபோலவே இந்த வாழ்க்கையில் அவருக்கு அமையக்கூடிய எல்லா விஷயங்களிலும் நல்ல பயன் இருக்கிறதா என்றால் அதைக் கேள்விக்குறியாக தான் இருக்கும். அவன் பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படுகின்ற அனைத்து விதமான உறவுகள் மற்றும் செயல்கள் அனைத்திலும் கிரகங்களின் ஆதிக்கம் அதிக அளவு உள்ளது.

 ஒரு மனிதனின் கிரக ஆதிக்கத்தை பொறுத்தே அவனது நன்மை தீமைகள் அமைகிறது. அதுமட்டுமல்லாமல் அதில் இருக்கக்கூடிய அம்சங்களை பொறுத்து அவனது வெற்றியும் தோல்வியும் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

mesham rasi palan today | mesham rasi palan today in tamil

 மேஷ ராசி அன்பர்களே இன்று உன்னதமான குறிக்கோள்கள் அனைத்தும் ஈடேறக்கூடிய நாளாக இருப்பதால் இந்த நாள் உங்களுக்கு மிக நல்ல நாள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உற்சாகத்தோடு இருப்பீர்கள். இன்றைய நாள் நீங்கள் பொறுமையை சிறிது சோதிக்கும் நாளாக அமைந்துள்ளதால் எதிலும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை வேலையில் இறுக்கமான நிலை காணப்படும். பணியில் வெற்றிக்கான உங்களது சமயோதிட புத்தியை பயன்படுத்த வேண்டும்.

 நிதி நிலைமையை போற்றுத்தவரை பண பற்றாக்குறை காணப்படும். சேமிப்பு குறைவதால் கவலைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தை பொருத்தவரை திருப்திகரமாக இருக்காது. தலைவலியால் பிரச்சனைகள் ஏற்படும். பிரார்த்தனை மற்றும் தியானம் செய்வதின் மூலம் உங்கள் உடல் நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம்.

ரிஷபம்

risabam rasi palan today | risabam rasi palan today in tamil

வாழ்க்கையில் முன்னேற துடிக்க கூடிய ரிஷப ராசி அன்பர்களே, இன்று நீங்கள் கதைகளை உற்சாகமாக படிப்பதின் மூலம் வெற்றியின் உயரத்தை தொடுவதற்கான தூண்டுதல் உங்களுக்குள் ஏற்படும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்த வரை அதிக முயற்சியில் நீங்கள் பணியாற்றினால் மட்டும்தான் உங்கள் பணியை குறித்த நேரத்தில் முடிக்க முடியும். எதிலும் பொறுமையை கடைப்பிடித்தால் மட்டுமே வெற்றி கிட்டும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று வளர்ச்சி அதிகரிக்காது. பண பற்றாக்குறை நிலவுவதால் உங்களுக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தி கொடுக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை மன அழுத்தம் ஏற்படும். தேக ஆரோக்கியம் நன்றாக இருந்தாலும் நேர்மறை எண்ணத்தோடு இருப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் அனைத்திலும் வெற்றி பெற முடியும்.

மிதுனம்

midhunam rasi palan today | midhunam rasi palan today in tamil

மிதுன ராசி நேயர்களே இன்று விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற கூடிய நாள். இன்று முழுவதும் நீங்கள் மகிழ்ச்சியோடு செயல்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகளவு உள்ளது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிபுரியும் இடத்தை சாதகமான சூழ்நிலை இருக்காது. வேலையின் போது கவனக்குறைவு ஏற்படும். எனவே மிகவும் கவனத்தோடு செயல்பட வேண்டும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை வரவும் செலவும் சேர்ந்தே காணப்படும். பணத்தை செலவு செய்யும் போது கவனத்தோடு செலவு செய்யுங்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சுமாரான நாளாக இருப்பதால் பல்வலி  ஏற்படும். உணவில் கட்டுப்பாடை மேற்கொள்வது மிகவும் நல்லது.

கடகம்

kadagam rasi palan today | kadagam rasi palan today in tamil

கடக ராசி நேயர்கள் அனைவரும் இன்று அதிகளவு ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்ளக்கூடிய நாளாக உள்ளதால் எந்த செயல்களையும் சிறந்த முறையில் செய்ய நீங்கள் தயாராக இருப்பீர்கள். சற்று ரிலாக்ஸ் ஆக இருந்து எதையும் செய்ய வேண்டும் அப்படி செய்வதால் உங்களுக்கு கட்டாயம் வெற்றி கிட்டும்.

இதையும் படிங்க :  இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2023 சனிக்கிழமை - Today Rasi Palan in Tamil

 தொழிலைப் பொறுத்தவரை வேலையில் நல்ல நல்ல வாய்ப்புகள் வந்து சேர்வதால் மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் பணியை குறித்த நேரத்தில் முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள்.

 நிதி நிலைமையும் இன்று மிகவும் அருமையாக இருப்பதால் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். ஊக்கத்தொகை அல்லது இதர சலுகைகள் என்று வந்து சேரும். பணத்தை அதிகளவு பெறுவதற்கான வாய்ப்புகள் இன்று உள்ளது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை சிறப்பான நாளாக இருப்பதால் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை பற்றி எள்ளளவும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

சிம்மம்

simmam rasi palan today | simmam rasi palan today in tamil

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அதிக அளவு இன்று கலந்து கொள்ள உங்களது மனம் கூறும். எனவே நீங்கள் அதிகளவு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

 தொழிலை பொறுத்த வரை பணி வளர்ச்சி குறித்த கவலை இருக்கும். தற்போதைய பணியில் நீங்கள் கவனத்தை அதிகமாக செலுத்துவது மிகவும் நல்லது. நிதிநிலைமையை பொறுத்தவரை இன்று சாதகமான நாள் இல்லை. ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்பதால் நிதியை நீங்கள் உயர்த்துவது சற்று சிரமம். பணப்புழக்கம் குறையும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை அஜீரணக் கோளாறுகள் தோள் வலி போன்றவற்றால் பாதிப்புகள் ஏற்படும். தினமும் கட்டாய உடற்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் சிறப்பானது.

கன்னி

kanni rasi palan today | kanni rasi palan today in tamil

 கன்னி ராசி அன்பர்களே இன்று உங்களிடம் காணப்படும் பயம் காரணமாக தன்னம்பிக்கையை நீங்கள் முற்றிலும் இழந்து விடுவீர்கள். இது உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக மாறிவிடும். இன்று சிறப்பான நாளாக இல்லை என்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பதை என்று நீங்கள் தள்ளிப் போட வேண்டும்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொருத்தவரை மனதை ஒருமுகப்படுத்தி பணியாற்ற வேண்டியது முக்கியம். நீங்கள் தொழில்முறையில் அணுகுமுறையை பின்பற்றும்போது சற்று நிதானத்தை கடைபிடித்தல் நன்மை பயக்கும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை சாதகமான நாளாக இல்லை. செலவினங்கள் அதிகரிக்கலாம் .எனவே ஜாக்கிரதையாக பணத்தை செலவு செய்யும்போது திட்டமிடவும். ஆரோக்கியமும் அதே போலத்தான் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம்.

துலாம்

thulam rasi palan today | thulam rasi palan today in tamil

வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் துலாம் ராசி நேயர்களே. இன்று திட்டமிட்ட செயல்கள் மூலம் நீங்கள் வெற்றியை அதிக அளவு பெற முடியும். ஆன்மீக ஈடுபாடு உங்கள் மன அமைதியும், நிறைவையும் ஏற்படுத்தித் தரும் என்பதால் ஆன்மீகத்தில் இன்று நீங்கள் ஈடுபடுவீர்கள்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொருத்தவரை பணிவிட சூழல் நிலைகள் சமூகமாக இருப்பதால் உங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும் எல்லாவற்றிலும் வெற்றி அடையக்கூடிய நிலை உள்ளது.

 நிதி நிலைமையை பொருத்தவரை இன்று வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரக்கூடிய சூழ்நிலைகள் அதிகளவு உள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை தவறு ஏதுமில்லை. ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும் எனவே நீங்கள் உங்கள் செயல்களை சிறப்பாக செய்யலாம்.

விருச்சிகம்

viruchigam rasi palan today | viruchigam rasi palan today in tamil

விருச்சிக ராசி அன்பர்களே என்று நீங்கள் செய்யக்கூடிய செயல்களில் அதிக கவனம் தேவை. அத்தியாவசியமான தேவைகள் அதிகரிக்கும்.அந்த தேவைகளை பூர்த்தி செய்ய நீங்கள் கடுமையான முயற்சிகளில்  ஈடுபடுவீர்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று எடுத்திருக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எனினும் நீங்கள் உங்களோடு பணியாற்றுபவரை அனுசரித்து போக வேண்டும். உங்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய நாளாக தொழில் ஸ்தானம் இன்று உள்ளது.

 நிதிநிலை பராமரிப்பதில் நீங்கள் மிகவும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். மேலும் நிதிநிலைமை என்று சாதகமாக உங்களுக்கு அமைந்திருப்பதால் திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். ஆரோக்கியத்தில் எந்தவிதமான சுணக்கமும் இல்லை. கடவுளைப் பிரார்த்தனை செய்வதின் மூலம் நேர்மறை ஆற்றல்கள் உங்களுள் பெருகும்.

இதையும் படிங்க :  இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2023 செவ்வாய்கிழமை - Today Rasi Palan in Tamil

தனுசு

Dhanusu rasi palan today | Dhanusu rasi palan today in tamil

தொட்ட செயல்கள் அனைத்தும் துவங்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படக்கூடிய தனுசு ராசி நேயர்களே இன்று நீங்கள் நம்பிக்கை மற்றும் உறுதியோடு செயல்பட்டால் வெற்றி மேல் வெற்றி வந்து உங்களைச் சேரும் என்று கூறலாம்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை எதிர்பார்க்கும் பலன் கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் எல்லோரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும். அதிக வேலை காரணமாக உங்கள் திறமையை நீங்கள் வெளிப்படுத்தி வெற்றி அடைய முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை வளர்ச்சி சாதகமாக இல்லை. பணத்தை கவனமாக கையாள வேண்டும். திட்டமிட்டு செலவிட்டால் மிகவும் நல்லது. ஆரோக்கியத்திலும் வேலைப்பளு அதிகமாக இருப்பதின் காரணமாக களைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உண்ணும் உணவில் எண்ணெய் பண்டங்களை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

மகரம்

magaram rasi palan today | magaram rasi palan today in tamil

எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற அற்புதமான குணம் படைத்த மகர ராசி நேயர்களே, உங்கள் வாழ்வில் செழிப்பை காண்பதற்கு நல்ல விஷயங்களை நடைமுறைப்படுத்தக் கூடிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. எனவே எதையும் திட்டமிடுதல் மூலம் நீங்கள் வெற்றியை அடைய முடியும்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை இன்று பதட்டம் அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பணி சுமையும் கூடுதலாக இருப்பதால் நீங்கள் அவற்றை சமாளிப்பதற்கு பொறுமையை கையாள வேண்டும். அப்போது உங்களது பணியில் சுணக்கம் ஏற்படாது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று வளர்ச்சி இருக்குமா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டு.ம் உங்களது சேமிப்புத் தொகை இன்று உயராது சிக்கனத்தை கடைப்பிடித்தல் நல்லது. ஆரோக்கியத்தை பொருத்தவரை உணர்ச்சிவசப்படாமல் இருக்கும் வரை உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இல்லை என்றால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடிய நாளாக உள்ளது.

கும்பம்

kumbam rasi palan today | kumbam rasi palan today in tamil

கும்ப ராசி நேயர்களே ஆன்மீக காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதின் மூலம் மனம் மகிழ்ச்சியோடு இருப்பது மட்டுமல்லாமல் மன திருப்தியும் அளிக்கும். இன்று உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் இருப்பதால் நீங்கள் முயற்சி செய்வதின் மூலம் முன்னேற்றம் அடைவீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாத சூழ்நிலை நிலவுவதால் பணியில் கவனத்தை செலுத்துவது மிகவும் சிறப்பானது.

 நிதிநிலைமையை பொறுத்தவரை இன்று சாதகமான நாளாக இல்லை. நீங்கள் பணத்தை கையாளும் போது கடினமாக உணர்வீர்கள். சிக்கனத்தை மேற்கொள்வது மிகவும் நல்லது. ஆரோக்கியத்தை பொருத்தவரை பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படுவதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் இரவில் தூக்கமின்மை ஏற்படும். எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மீனம்

meenam rasi palan today | meenam rasi palan today in tamil

கடுமையான முயற்சிகளால் எடுத்த காரியத்தை வெற்றியை சாதிக்க கூடிய மீன ராசி அன்பர்களே இன்று முக்கிய நிகழ்வுகளில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது. திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் எதிலும் வெற்றிகளை எட்டிப் பிடிக்க முடியும்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணியிட சூழல் இன்று உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல பலன்கள் வந்து கிடைக்கும். இதனால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை வரவும் செலவும் சேர்ந்தே காணப்படுவதால் திட்டமிட்டு பணத்தை சேமிப்பது மிகவும் நல்லது. ஆரோக்கியத்தை பொருத்தவரை அச வுரியங்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளது. பொறுமையோடு எதையும் எதிர்கொள்ளுங்கள். யோகா, தியானம் செய்வதின் மூலம் உடல்நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top