Connect with us

Today Rasi Palan

ராசிபலன் (Rasi Palan) – 04 பிப்ரவரி 2025, செவ்வாய் கிழமை

By TamizhakamFebruar 4, 2025 5:09 AM IST

உங்கள் ராசிபலன், பரிகாரம், வாழ்வியல் நுணுக்கங்களை தினமும் தெரிந்து கொள்ள இந்த ( https://t.me/todayrasipalantamil ) Telegram Channel-ல் இணைந்து கொள்ளுங்கள்.

மேஷம் (Aries):

மாணவர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாள். அவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த கல்வி தொடர்பான எண்ணங்கள் இன்று நிறைவேறும். குறிப்பாக, யோகா மற்றும் நடன வகுப்புகளில் ஆர்வம் உள்ள மாணவர்கள் இன்று அந்த துறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். அதற்கான முயற்சிகளும் இன்று பலன் கொடுக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உங்களின் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரிகள் இன்று அதிக லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, ஆனால் அதற்கு கூடுதல் முயற்சி அவசியம். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிவப்பு நிறம் அதிர்ஷ்டம்.

ரிஷபம் (Taurus):

இன்று நீங்கள் சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகளைத் தவிர்த்து சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். சிலருக்கு இன்று கௌரவப் பதவிகள் தேடி வரும் வாய்ப்புள்ளது. உயர்கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். மகான்கள் மற்றும் சித்தர்களின் ஆசி கிடைக்கும். வெளிநாட்டில் இருக்கும் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சாம்பல் நிறம் அதிர்ஷ்டம்.

மிதுனம் (Gemini):

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று அதிக ஆர்டர்கள் கிடைக்கும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நேரம். கலைஞர்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை இன்று கையில் வந்து சேரும். பெண்கள் இன்று செலவுகளைக் குறைத்து சேமிக்க முயற்சிப்பார்கள். வெளிர் ஊதா நிறம் அதிர்ஷ்டம்.

கடகம் (Cancer):

இன்று தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. கை, கால் வலி வந்து போக வாய்ப்புள்ளது. எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். பெற்றோரின் உடல்நிலையைக் கவனிப்பது நல்லது. கருநீல நிறம் அதிர்ஷ்டம்.

சிம்மம் (Leo):

நவீன தொழில்நுட்ப கருவிகளை இன்று புதிதாக வாங்குவீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. வெளியுலகில் உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு இன்று நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி பெருகும். வான் நீல நிறம் அதிர்ஷ்டம்.

கன்னி (Virgo):

இன்று உத்திரம் மற்றும் அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் எந்த ஒரு சுப காரியங்களையும் துவங்க வேண்டாம். சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்கள் சுபகாரியங்களை ஆரம்பிக்கலாம். புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். மஞ்சள் நிறம் அதிர்ஷ்டம்.

துலாம் (Libra):

இன்று உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் கூடி வரும். பெற்றோருடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழுதான வாகனம் இன்று சரியாகும். உங்களைப் பற்றிய வதந்திகள் இன்று அதிகமாகும். பொது இடத்தில் வெளிப்படையாகப் பேசி சிக்கிக் கொள்ள வேண்டாம். ஊதா நிறம் அதிர்ஷ்டம்.

விருச்சிகம் (Scorpio):

இன்று உங்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள். பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை இன்று கையில் வந்து சேரும். கிரே நிறம் அதிர்ஷ்டம்.

தனுசு (Sagittarius):

மாணவர்கள் இன்று ஆசிரியர்களிடத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள். தம்பதிகளின் வாழ்வில் இனிமை கூடும். கசந்த காதல் இனிக்கும். பேச்சாளர்களுக்கு பாராட்டும், மதிப்பும் கூடும். கணினி துறையைச் சேர்ந்தவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். வெள்ளை நிறம் அதிர்ஷ்டம்.

மகரம் (Capricorn):

இன்று திருமணத்திற்கு தேவையான ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். பல்வேறு வழிகளில் உங்களுக்கு பணம் வரும். அரசியல்வாதிகளுக்கு தங்கள் கட்சியில் பெரிய பொறுப்புகளும் பதவியும் கிடைக்கும். உத்யோகத்தில் வரவேண்டிய பாக்கித் தொகை வந்து சேரும். பெண்களின் திருமணக் கனவு நிறைவேறும். சாம்பல் நிறம் அதிர்ஷ்டம்.

கும்பம் (Aquarius):

மகளுக்கு திருமணம் கூடி வரும். உங்கள் பிள்ளைகள் விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். எனவே, கவனம் தேவை. எதிர்க்கட்சியினரின் பாராட்டு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். வருமானம் உயரும். கிளிப்பச்சை நிறம் அதிர்ஷ்டம்.

மீனம் (Pisces):

எதிர்பார்த்திருந்த வேலைக்கான அழைப்பு இப்போது வரும். வேலையாட்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் கூடும். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். தடைகளெல்லாம் நீங்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். ரோஸ் நிறம் அதிர்ஷ்டம்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top