Connect with us

Today Rasi Palan

இன்றைய ராசிபலன் (Rasi Palan) – 31 ஜனவரி 2025, வெள்ளிக்கிழமை

By TamizhakamJanuar 31, 2025 6:31 AM IST

இன்றைய பஞ்சாங்கம்

  • தமிழ் நாள்: தை மாதம் 18
  • சூரிய உதயம் : 06:36
  • திதி: துவிதியை
  • நட்சத்திரம்: அவிட்டம் (காலை 08.07 வரை) பின்னர் பூரட்டாதி
  • யோகம்: சித்தயோகம்
  • பிறை: வளர்பிறை

நல்ல நேரம்:

  • காலை 09:30 முதல் 10:30
  • மாலை 04:30 முதல் 05:30
  • கௌரி நல்ல நேரம்: காலை 12:30 முதல் 01:30, மாலை 06:30 முதல் 07:30

அசுப காலம்:

  • ராகுகாலம்: காலை 10:30 முதல் 12:00
  • குளிகை காலம்: காலை 07:30 முதல் 09:00
  • எமகண்ட காலம்: மாலை 03:00 முதல் 04:30

முக்கிய குறிப்புகள்:

  • இன்று சுபமுகூர்த்த நாள்.
  • திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் தொட்டி திருமஞ்சனம் நடைபெறுகிறது.

இன்றைய நாள் செய்ய ஏற்றவை:

புனர்பூசம், பூசம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். துவிதியை திதியில் முஞ்சிப்புல்லால் செய்ய வேண்டிய வேலைகள், திருமணம், பயணம், கோவில் அனைத்தல், வீட்டில் வளிபாட்டு இடம் அமைத்தல், நகை உற்பத்தி செய்தல்,-அணிதல், உடல் வலிமையான வேலைகளை செய்தல், வீடு கட்டுதல் நல்லது. யோகம் நல்லதாக இருப்பதால் புதிய தொடக்கங்களுக்கு ஏற்ற நாள்

மேஷம் ராசி பலன்:

மேஷ ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு ஒரு சிறப்பான நாள்! தொழில் ரீதியாக நீங்கள் எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் உங்கள் வழியில் வரலாம். நீண்ட காலமாக முயற்சி செய்து வந்த ஒரு விஷயம் இன்று நிறைவு பெறும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடலாம்.

ரிஷபம் ராசி பலன்:

ரிஷப ராசி அன்பர்களே, இன்று உங்கள் குடும்பத்துடன் புனித யாத்திரை செல்லலாம். அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். உங்கள் மேலதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடலாம்.

மிதுனம் ராசி பலன்:

மிதுன ராசி அன்பர்களே, இன்று உங்கள் தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். புதிய திட்டங்களை செயல்படுத்த சிறந்த நாள்.

கடகம் ராசி பலன்:

கடக ராசி அன்பர்களே, இன்று உங்கள் நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம்.

சிம்மம் ராசி பலன்:

சிம்ம ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். துணையுடன் நல்ல நேரத்தை செலவிடலாம். பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி பலன்:

கன்னி ராசி அன்பர்களே, இன்று பணியிடத்தில் எதிர்ப்பவர்கள் இருப்பார்கள். வேலைகளை திட்டமிட்டு செய்யவும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம்.

துலாம் ராசி பலன்:

துலாம் ராசி அன்பர்களே, இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் சாதகமாக இருக்கும். வேலை தொடர்பாக புதிய திட்டங்கள் வெற்றி பெறும்.

விருச்சிகம் ராசி பலன்:

விருச்சிக ராசி அன்பர்களே, இன்று உங்கள் வேலையில் புதுமையை புகுத்தலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.

தனுசு ராசி பலன்:

தனுசு ராசி அன்பர்களே, இன்று புதிய வேலைகளில் ஈடுபடலாம். வணிகத்தில் சிறிது நெருக்கடி இருக்கலாம்.

மகரம் ராசி பலன்:

மகர ராசி அன்பர்களே, இன்று உங்கள் செயல்களில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம் ராசி பலன்:

கும்ப ராசி அன்பர்களே, இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பதற்றத்தை தவிர்க்கவும்.

மீனம் ராசி பலன்:

மீனம் ராசி அன்பர்களே, இன்று குழப்பமான சூழல் விலகும். நிதானமாக முடிவுகள் எடுக்கவும்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top