அவன் அடித்தால் இரத்தம் நான் அடிவாங்கினால் தக்காளி சட்னியா?

தக்காளி வரலாறு

தக்காளி இல்லாமல் எதுவுமே சமையலில் இல்லை என்று கூறும் அளவுக்கு இந்த தக்காளி என்று சமையலறையில் அதிகளவு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் பிறப்பிடம்  அமெரிக்க  அமெரிக்க கண்டம் எனவும் 16 ஆம் நூற்றாண்டில் தான் உணவாக புழக்கத்திற்கு வந்துள்ளது.அதன் பின்

 ஸ்பெயின், ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற நாடுகளில் வளர்க்கப்பட்டது. 

தக்காளி பெயர் காரணம்:

தக்காளியின் அறிவியல் பெயர் சோலானம் லைக்கோபெர்சிக்கம்  ஆகும். பிரெஞ்சுக்காரர்கள்  சொந்த வழியில் ஆஸ்டெக்குகளின் பெயரை மாற்ற விரும்பியதோடு தக்காளியை “டோமேட்” என்று அழைத்தனர்.

இந்தியாவில் உள்ள தக்காளியின் ரகங்கள்:

கோ 1, கோ 2, மருதம் (கோ 3), பி.கே.எம். 1, பூசாரூபி, பையூர் 1, சி.ஓ.எல்.சி.ஆர்.எச். 3, அர்கா அப்ஜித், அர்கா அஹா, அர்கா அனான்யா ஆகிய ரகங்கள் உள்ளது.

தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

வைட்டமின் ஏ, சி, பி, கே மற்றும் கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச்சத்து,பொட்டாசியம், கோபால்ட், மெக்னீசியம், போரான்  போன்ற சத்துக்களும் பெக்டின், ஆல்ஃபா கரோட்டின், லூட்டின், பீட்டா கரோட்டின் உள்ளது. மேலும் இதன் சிவப்பு நிறத்திற்கு காரணம் லைகோபீன் என்ற நிறமியாகும்.

தக்காளியில் உள்ள லைகோபீன் மூலம் கிடைக்கும் நன்மைகள்:

லைகோபீனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமம் முதிர்ச்சி அடையாமல் காக்கும் பணியை  செய்வதால் என்றும் இளமையான தோற்றம் நமக்கு கிடைக்கும்.

லைகோபீன் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றவும், புற்றுநோய் பாதித்த திசுக்களுடன் போராடி நோய்க்கிருமிகளுக்கு எதிராகச் செயல்படக்கூடிய தன்னை கொண்டது.

மருத்துவ பயன்கள்:

தக்காளியில் உள்ள வைட்டமின்-ஏ, கண் பார்வையை மேம்படுத்தி  மாலைக்கண் நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.

குவர்சிடின், கேம்ஃபெரோல் போன்ற பிளேவனாய்டுகள் இதில் உள்ளதால் உடலில் ஏற்படும் கட்டி மற்றும் வீக்கங்களை சரி செய்யும்.

லூட்டின் , சியாக்ஸந்தின்  போன்ற கரோட்டினாய்டுகள் இருப்பதால்  கண் திசுக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் ஒளியிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

அழகு கலையில் தக்காளி:

தக்காளிச்சாற்றை முகத்தில் பூசுவதால் முகத்தில் வழியும் எண்ணெய்ப்பசை அகலும்.

முகப்பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையவும் தக்காளிச்சாறு உதவுகிறது.

கழுத்து பகுதியில் உள்ள கருமை நிறம் தக்காளி சாற்றை தினமும் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் மறையத்தொடங்கும்.

எனவே பளபளக்கும் தக்காளி பல வகைகளில் சமையலில் பயன்பட்டாலும் அதை அளவோடு சாப்பிடுவதன் மூலம் நாம் வளமோடு வாழலாம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.