வாழ்க்கை பாடத்தை கற்றுத்தரும் பரமபதம்.

 இன்றைய இளைய தலைமுறை விளையாடுவதற்கு என்று பலவிதமான மின்னணு சாதனங்கள் உள்ளது. அவை கம்ப்யூட்டர் லேப்டாப் டேப்லெட் இதில் விதவிதமான விளையாட்டு மென்பொருட்களை கொண்டு அவர்கள் விளையாடி பொழுதை தள்ளி வருகிறார்கள்.

 ஆனால் பண்டைய காலங்களில் விளையாட பயன்படுத்தப்பட்ட அனைத்துப் பொருட்களிலும் ஏதோ ஒருவித வாழ்க்கை தத்துவம் அடங்கியுள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த வரிசையில் பரமபதம் விளையாட்டைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

பரமபத விளையாட்டு:

 இன்றும் கிராமப்புறங்களில்  வைகுண்ட ஏகாதேசி அன்று கண்டுபிடிப்பதற்காக விளையாடப்படும் மிக அற்புதமான விளையாட்டு தான் இந்த பரமபத விளையாட்டு. இந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.

இந்த பரமபத விளையாட்டில் பார்த்தீர்கள் என்றால் பாம்பு மற்றும் ஏணிகள் கொண்ட அமைப்புதான் உள்ளது. தாயக்கட்யை  பயன்படுத்தி முதலில் ஒன்று என்ற இலக்கம் உள்ள தாயத்தை போட்டு விட்டால் விளையாட்டை துவங்கி அந்த கட்டங்களின்  ஊடே நமது காய்களை நகர்த்தி விளையாட வேண்டும்.

---- Advertisement ----

பரமபதம் விளையாடும் போது சில சமயம் உங்களால் ஏணியில் ஏற முடியும்.அதேபோல் பாம்பின் தலையை அடைந்துவிட்டால் நம் காய்களை நகர்த்தி அதன் வால் எந்த பகுதியில் உள்ளதோ அந்தப் பகுதிக்கு வந்து விட வேண்டும். இது மனித வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஏற்றத்தையும், தாழ்வையும் மனிதனுக்கு உணர்த்துவதோடு நாம் இறங்கி விட்டால் மனம் தளராமல் மிகவும் முன் ஜாக்கிரதையோடு முன்னேற வேண்டும் என்ற தன்னம்பிக்கை தரக்கூடிய விளையாட்டாக  அன்று காணப்பட்டது.

எனவே தற்போதுள்ள மின்னணு விளையாட்டுப் பொருட்களை தவிர்த்துவிட்டு குழந்தைகளுக்கு நேர்மறையான எண்ணங்களையும் மனவுறுதியும் தரக்கூடிய இது போன்ற பாரம்பரிய விளையாட்டுகளில் அவர்களை  ஈடுபடுத்தினால் நிச்சயமாக வரும் தலைமுறை மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

இன்று உள்ள விளையாட்டுகளை விளையாடும் போது அவர்களிடையே எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகி மன அழுத்தத்தை தருவதோடு தீய சிந்தனைகளை ஏற்படுத்துகின்ற விளையாட்டுகளில் இருந்து விலகி இருக்க இது போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் உதவும்.

---- Advertisement ----