சிம்பு ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் என்ன அப்படின்னா… வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா தான்.

நடிகர் சிம்புவை பற்றி அதிகமான அளவு நாம் கூற வேண்டியதில்லை. ஏனென்றால் டி . ராஜேந்தரின் மகனாக இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமாகி இன்று ஒரு மிகப் பெரிய ஸ்டாராக உருவெடுத்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே இவரது நடிப்பிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

பல்வேறு சர்ச்சைகள் மற்றும் காதலில் இவர் விழுந்து இருந்தாலும் இவரது படத்துக்கு என்று தனி கூட்டம் உள்ளது. இவர்  மாநாடு, மகா போன்ற படங்களை  தொடர்ந்து இப்போது கௌதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் வித்தியாசமான கதைக்களம் கொண்டது. மேலும் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.

இந்த படத்தின் இசை  வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் யுனிவர்சிட்டியில்  பிரம்மாண்டமான செட்கள் போடப்பட்டு  உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிம்புவின் தீவிர ரசிகர்கள் சென்னை நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் உள்ளார்கள்.

ஏறக்குறைய அனைத்து பணிகளும் முடிந்து, நிறைவடைந்த இந்த படமானது செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. 

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காகவும், சிம்புவின் பேச்சைக் கேட்பதற்கு ஏராளமான ரசிகர்கள் வந்துள்ளனர். சிம்புவும் பத்துதலை சூட்டிங்கில் இருந்து  விடுபட்டு சென்னை வந்திருக்கிறார்.இந்த  பிரம்மாண்டமான இசை விழாவில் உலக நாயகன் கலந்து கொள்ளப் போவதாக தெரிகிறது.

மேலும் இந்த பட விழாவில்  இப்பட வெளியீட்டாளர் ஆன உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் கௌதம் மேனன், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் மற்றும் அனைத்து படக்குழுவினரும் பங்கேற்க உள்ளார்கள்.

இசை வெளியீட்டு விழா முடிந்த கையோடு இன்னும் சில தினங்களில் படத்தின் பிரமோஷன்  மிக விரைவில் வெளிவரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், போனாலும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கான இடத்தை யாராலும் நெருங்க கூட முடியவில்லை …