“பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – எம்புட்டு அழகு.. இளசுகளை அசரடிக்கும் நடிகை திரிஷா..!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தின் போஸ்டர்கள், பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. நடிகர் நடிகைகளும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தங்களுடைய கதாபாத்திரத்தின் பெயரையே மாற்றி வைத்துக்கொண்டு படத்திற்கான புரமோஷனை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷா குந்தவை பிராட்டியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை ஐஸ்வர்யாராய் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கதைப்படி இருவரும் பரம எதிரிகள் என்றாலும்கூட பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

சரித்திர காலத்து அரண்மனை செட்டில் இருவரும் நின்று கொண்டு செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த நடிகை திரிஷா ட்ரான்ஸ்பரண்ட் புடவை அணிந்து கொண்டு படு சூடாக வந்திருந்தார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …