“ப்பா.. எம்புட்டு அழகு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – திரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாகப் பேசப்படும் நடிகையாக வலம் வருபவர் திரிஷா. மிஸ் சென்னையாகத் தேர்வு செய்யப்பட்ட திரிஷா, அதனைத் தொடர்ந்து சிம்ரன், பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக திரையுலக பயணத்தைத் தொடங்கினார்.

தற்போது வரை பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது.

தனது 20 வருட திரைப்பயணத்தை சமீபத்தில் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார் திரிஷா.நடிகை திரிஷா, 1999-ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தின் சிம்ரனுக்கு தோழியாக நடித்து கோலிவுட்டில் தலை காட்டினார்.

பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ‘லேசா லேசா’ படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர்.இதனை தொடர்ந்து, விஜயுடன் சேர்ந்து நடித்த கில்லி படம் மக்கள் மனதில் இருக்கு நீங்காத இடத்தை பெற்று தந்தது.

அதனை,தொடர்ந்துவிக்ரமுடன் ஜோடியாக நடித்த சாமி திரைப்படம் ஹிட் அடிக்க தமிழ் சினிமாவில் மாஸ் காட்ட துவங்கி விட்டார்.அடுத்தடுத்து ரஜினி, கமல் விஜய், அஜித், விக்ரம், சூர்யா மாஸ் ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு தேடி வர தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை தன் வசம் வைத்து கொண்டார்.

விஜய் சேதிபதியுடன்சேர்த்து நடித்த 96 திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவர் திரையுலகத்திற்கு வர முக்கிய காரணமாக இருந்தது இந்த மிஸ் சென்னை பட்டம்தான்.

என்று அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், நடிகை திரிஷா சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். இணையத்தில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் இவர், புகைப்படம் வீடியோக்களை பதிவு செய்வார்.

இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு விளம்பர படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். எனவே, தற்போதும் மறக்காமல், மறுக்காமால், விளம்பர படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …