மனிதனாக பிறந்த ஒவ்வொருவனுக்கும் கற்காமலயே இயற்கையாக தோன்றும் ஒரு உன்னத உணர்வு வருமென்றால் அதை காதல் என்று கூறலாம். அந்த உணர்வுக்கு மயங்காதவர்கள் எவருமே இல்லை என்றே சொல்லலாம்.
காதல் ஒவ்வொரு காலத்திற்கு ஒரு மாதிரியாக விமர்சிக்கப்படுகிறது. அந்த காலத்து காதல்.. இந்த காலத்து காதல் என எப்போதும் காதல் மனிதகுலத்தின் பரிமாண வளர்ச்சியின் அகக்குறியீடாகவே உள்ளது.
எந்த காலத்து காதலாக இருந்தாலும் சரி, அது உண்மையான காதலாக இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம் காதல் என்பதுதான் பலரின் விருப்பம். ஆந்திர மாநிலத்தில் ஒரு மாணவனுக்காக இரண்டு மாணவிகள் நடுரோட்டில் தலைமுடியை பிடித்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு மாணவன் வெவ்வேறு பள்ளிகளில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவிகளை ஒரே நேரத்தில் காதலித்துவந்த நிலையில் இந்த மோதல் நடந்துள்ளது.
ஒரு பெண்ணுக்காக இரண்டு இளைஞர்கள் அடித்துக் கொண்ட காலம் போய், இப்போது ஒரு இளைஞனுக்காக இரண்டு பெண்கள் அடித்துக் கொள்ளும் காலம் ஆகிவிட்டது என பலரும் இதை விமர்சித்து வருகின்றனர்.