“சமையலுக்கு இந்த சமையல் எண்ணெய் பயன்படுத்துறீங்களா..!” – அதுல என்னென்ன நன்மைக பார்க்கலாமா..!!

பொதுவாக இன்று அனைவரது வீட்டிலுமே கோல்டு வின்னர், மிஸ்டர் கோல்ட் போன்ற சமையல் எண்ணெய்கள் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது. இவை அனைத்துமே சூரியகாந்தி விதையிலிருந்து எடுக்கப்படக்கூடிய ரீபைன்ட் ஆயில் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்.

மேலும் சமையலில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற பலவிதமான எண்ணெய்கள் பயன்பாட்டில் உள்ளது. இதில் எந்தெந்த எண்ணெய்களை நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்களோ அந்த எண்ணெய்களினால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சமையல் செய்யும் எண்ணெய்களின் வகைகள் மற்றும் நன்மைகள்

இன்று நாகரிக யுகத்தில் ஆலிவ் ஆயிலை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். சமையலுக்கு பயன்படும் ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஈ, அதிக அளவு நிறைந்து இருப்பதால் இது புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கொழுப்பு அமிலமான ஒலிக் அமிலம் புற்றுநோய் எதிர்ப்பு சக்திக்கு துணை புரிகிறது.

நல்லெண்ணில் சமையல் செய்வதின் மூலம் இதயத்திற்கு ஆரோக்கியம் கிடைப்பது மட்டுமல்லாமல் நிறைய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இருப்பதால் நீரழிவு நோயாளிகள் தொடர்ச்சியாக நல்லெண்ணெயில் சமைத்த உணவுகளை சாப்பிடும் போது ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வருவதாக இன்றைய ஆய்வுகள் கூறியுள்ளது.

சிலர் குங்கும பூவில் இருந்து எடுக்கப்படுகின்ற எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள். இதில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவி செய்கிறது.

---- Advertisement ----

வடநாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகளவு கடுகு எண்ணெயை பயன்படுத்தி வருகிறார்கள். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு தோல் பிரச்சனை முடி உதிர்தல் மூட்டு வலி, தசைப்பிடிப்பு நிறைய பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய ஆற்றல் கொண்டது.

சிலர் பாமாயிலை பயன்படுத்துகிறார்கள் இதில் அதிகமான கொழுப்பு வளர்ச்சி நோய்களை உண்டு பண்ணக்கூடிய அம்சம் உள்ளது. எனவே இதன் பயன்பாட்டை குறைத்துக் கொள்வதில் நல்லது. அதுபோல சூரியகாந்தி எண்ணெயில் அதிகளவு ஒமேக ஆறு இருப்பதால் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தன்மை உள்ளது. எனவே ரீபைண்ட் ஆயில் பயன்படுத்துவதையும் தவிர்த்து விடுங்கள்.

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. சரும ஆரோக்கியம் மேம்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுகிறது.

எனவே சமையலுக்கு ரீபைண்ட் ஆயில் பயன்படுத்துவதை தவிர்த்து கடலை எண்ணெய் நல்லெண்ணெய் போன்ற பாரம்பரிய எண்ணெய்களை பயன்படுத்தினாலே போதுமானது.

---- Advertisement ----