டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் பலி..! – கொசுவர்த்தி புகைப்படத்தை பதிவிட்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின்..!

உதயநிதி ஸ்டாலின் : சென்னையை அடுத்து இருக்கக்கூடிய மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்த நான்கு வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து சாலைகளில் தேங்கிய கழிவு நீரை முறையாக அகற்றாத மாநகராட்சி அதிகாரிகள் தான் இதற்கு காரணம். அவர்களுடைய அலட்சியம் தான் இதற்கு காரணம் என்று அந்த குழந்தையின் உறவினர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய twitter பக்கத்தில் கொசுவர்த்தி சுருள் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

ஆனால் இந்த புகைப்படத்தை எதற்காக வெளியிட்டு இருக்கிறார் என்ற எந்த ஒரு தகவலையும் அவர் பதிவிடவில்லை. எந்த ஒரு குறிப்பும் அவர் பதிவிடவில்லை.

இதனை பார்த்த இணையவாசிகள் நான்கு வயது சிறுவன் டெங்குவினால் மரணம் அடைந்ததற்காக கொசுவை ஒழிக்க வேண்டும் என்று இந்த எரியும் கொசுவர்த்தி சுருளை பதிவு செய்திருக்கிறீர்களா…? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மறுபக்கம் முன்னதாக சனாதனம் என்பது டெங்கு மலேரியா போன்றது இதனை எதிர்க்க முடியாது ஒழித்து விட வேண்டும் என்று பேசி இருந்தார் உதயநிதி.

சனாதனம் என்பதை கொசுவோடு ஒப்பிட்டு பேசியிருந்த நடிகை உதயநிதி ஒருவேளை அதனை ஒழிக்க கொசு எரியும் கொசுவர்த்தி சுருளை பதிவிட்டு இருக்கிறாரா..? என்ற பல்வேறு விதமான விவாதங்கள் அவருடைய அந்த பதிவுக்கு கீழே இணையவாசிகள் நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

எங்கள பாத்தா முட்டாளா தெரியுதா..? – லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சவுக்கு சங்கர் கேள்வி..!

சவுக்கு சங்கர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் …