உதய் அண்ணன் கைய வைச்சா சினிமா படம் தமிழ் சினிமாவில் வேற லெவல் தான்

ரெட் ஜெயன்ட்  மூவியின் தயாரிப்பாளரான உதயநிதி  இப்போதைய தமிழக முதல்வரின் மகன் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் இருப்பது மட்டுமல்லாமல் திருவள்ளிகேணி தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். இவர் ஒரு சிறந்த நடிகரும் கூட  “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தில் இவரின் நடிப்பை நாம் கண்கூடாக பார்த்திருக்கலாம்.

தமிழகத்தை பொறுத்தவரை எந்த தியேட்டரில் எந்த படம் வெளியாக வேண்டும் என்பதை ஒரு சிண்டிகேட் தான் முடிவு செய்கிறது. இதன் பின்னணியில் யார், யார் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரியும். இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தியேட்டர்கள் கிடைக்காமல் ரிலீஸ் தேதியை தள்ளிப்போடும் கூடிய படங்கள் ஏராளமாக உள்ளது. இதற்கு உதாரணமாக அமலாபால் நடித்த “கடாவர்” படத்தை கூட ஓடிடி யில் தான் வெளியிட முடிந்தது.

 உதயநிதியிடம் படத்தை கொடுத்து விட்டால் போதும் அவர் அதை வெளியிடுவதில் எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாக செய்து வசூலையும் அள்ளி விடுவார் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அதற்கு உதாரணமாக தற்போது வெளிவந்து ஒரு மிகப்பெரிய வசூல் சரித்திரத்தை தந்த விக்ரம் படத்தை நாம் கூறலாம்.

எனவே கொரோனா காலகட்டத்தில் கிடப்பில் போடப்பட்ட அத்தனை படங்களும் இப்போது தட்டி தூக்கப்பட்டு  உதயநிதி யோடு இணைந்து தயாரிக்கப்பட உள்ளது. அந்த வரிசையில் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து இந்தியன் 2 என்ற படத்தை உதயநிதி அவர்கள் தயாரிக்கப் போகிறார்கள்.

 மாமன்னன் என்ற படத்தோடு படத்திற்கு முழுக்குப் போட நினைத்த இவர் அரசியலில் தனது முழு நேரத்தையும் செலவு செய்து வந்திருந்தார். ஆனால் தற்போது மீண்டும் இவர் பார்வை தயாரிப்பு பக்கம் திரும்பியுள்ளது.

தற்போது இவர் விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள கோப்ரா படம், அருள்நிதி நடிப்பில் வெளிவர இருக்கக்கூடிய டைரி படம், கார்த்தியின் நடிப்பில் வெளிவர கூடிய சர்கார் படம்  என பல படங்களை தன் கைகளில் வைத்திருக்கிறார். இனிவரும் காலங்களில் இந்தப் பட்டியல்இன்னும் நீண்டு கொண்டே தான் போகும்.

 இதற்கு காரணம் என்னவென்று பார்க்கையில் உதயநிதி நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவியில் படத்தை வெளியிட்டால் லாபமாக தியேட்டர் வசூல் இருக்கும் மேலும் அனைத்துமே மிக  நியாயமாகவும் இருக்கும் என்று பலர் கூறுவதை பல படங்கள் இவர் கையில் உள்ளது.