Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நடிகை மீனா குறித்து பலரும் அறியாத ரகசியங்கள்..!

Tamil Cinema News

நடிகை மீனா குறித்து பலரும் அறியாத ரகசியங்கள்..!

நடிகை மீனா 1976 ஆம் ஆண்டு பிறந்தவர். தமிழ்நாட்டில் இருக்கும் சென்னையில் வளர்ந்த இவரது தாயார் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர். தந்தை ஆந்திராவை சேர்ந்தவர்.


சிறு வயதிலேயே திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இவர் 2006 ஆம் ஆண்டு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மூலம் வரலாற்று துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார்.

நடிகை மீனா..

தென்னிந்திய மொழிகளில் தனக்கு என்ற ஒரு பாணியில் நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை மீனா தமிழில் உச்சகட்ட நட்சத்திரங்களாக திகழ்ந்த ரஜினி, கமல், அஜித், விஜய் என பலரோடும் நடித்திருக்கிறார்.

அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் ரஜினியோடு குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் வளர்ந்து ஹீரோயினியாக மாறி ரஜினியோடு இணைந்து நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இதையும் படிங்க: பாதுக்காப்பான இடத்துல தான் அது நடக்கும்.. ஒரு நாளைக்கு இத்தனை பேரு.. கூச்சமின்றி கூறிய டிக்டாக் இலக்கியா..!

--Advertisement--


இவர் நடிப்பில் வெளி வந்த வானத்தைப்போல, வெற்றி கொடி கட்டு, ஆனந்த பூங்காற்றே, என் ராசாவின் மனசிலே, பாளையத்து அம்மன், பொற்காலம், ரிதம், மாமன் மகள் போன்ற திரைப்படங்கள் திரையுலகம் இருக்கும் வரை இவர் பெயர் சொல்லும்.

மீனா பற்றி தெரியாத ரகசியங்கள்..

இதனை அடுத்து இவர் பெங்களூருவை சேர்ந்த மென் பொருள் பொறியாளரான வித்யாசாகரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவருக்கு நைனிகா என்ற பெண் பிறந்தார். இந்த பெண் குழந்தையும் குழந்தை நட்சத்திரமாக தெறி படத்தில் தளபதி விஜய் உடன் நடித்திருக்கிறார்.

நடிகை மீனாவுக்கு தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகள் பேச தெரியும். இவர் முதல் முதலாக சிவாஜி கணேசன் நடித்த நெஞ்சங்கள் படத்தில் நடித்து அசத்தியவர்.


பெரும்பாலான ரசிகர்கள் அனைவரும் இவரை கண்ணழகி என்றே அழைத்து வந்தார்கள். அந்த அளவு தனது காந்த கண்களால் அனைவரையும் கவர்ந்து விடுவார்.

ஆத்தாடி இவ்வளவு இருக்கா..

மேலும் 16 வயதினிலே, காதலிசம் போன்ற ஆல்பங்களில் பாடியிருக்க கூடிய மீனா அண்ணாத்த படத்தில் தான் கடைசியாக ரஜினிகாந்த் உடன் நடித்திருந்தார். அத்தோடு இன்று இந்த காலையில் என்ற பாடலை இமான் இசையில் பாடி இருக்கிறார்.

பொக்கிஷம் என்ற திரைப்படத்தில் பத்மபிரியா நடித்திருந்தார். அவருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் மீனாதான். தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்க கூடிய இவர் ஜப்பானில் அதிக அளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார். இதற்கு காரணம் முத்து திரைப்படம் தான்.

மிகவும் சிரிப்புடன் எப்போதும் கலகலப்பாக இருக்கக்கூடிய நடிகை மீனா தன் கணவர் இறந்த பிறகு கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். அதனை விடுத்து தற்போது வெளி வந்திருக்கிறார்.


இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்துடன் சவகாசம் விஜய்யை எங்க கொண்டு வந்து நிறுத்தப்போகுது பாருங்க.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி..!

தன் கணவன் பற்றி சில பதிவுகளை வெளியிட்டு இருக்கக்கூடிய மீனா வானவில் போல் அவர் வாழ்க்கையில் அவர் வந்ததாகவும், அதனால் அவர் வாழ்க்கை மிகவும் கலர்ஃபுல்லாக மாறிவிட்டதாகவும் பதிவு செய்த பதிவு எவராலும் மறக்க முடியாது.

இதனை அடுத்து மீனாவின் பன்முகத் திறமையை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இதைப் பற்றி அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இந்த விஷயம் இணையங்களில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற விஷயமாக மாறிவிட்டது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top