உன்னை நினைத்து – காலில் விழுந்த சூர்யா..! – விலகிய விஜய்..! – பலரும் அறிந்திடாத தகவல்..!

உன்னை நினைத்து திரைப்படத்தில் நடிகர் விஜய் ஏன் விலகினார்..? சூர்யா எப்படி சேர்ந்தார்..? என்ற கேள்விக்கு நடிகர் ரமேஷ் கண்ணா பதில் கொடுத்துள்ளார்.

இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் உன்னை நினைத்து இந்த திரைப்படத்தில் நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் லைலா சினேகா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஒரே திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய திரைப்படமாக இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடித்தது நடிகர் விஜய் என்பது அனைவருக்கும் தெரியும். அதன்பிறகு நடிகர் சூர்யா இந்த படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த இடைப்பட்ட மாற்றத்தில் நடந்த உண்மைகள் என்ன..? என்று இயக்குனரும் நடிகருமான ரமேஷ் கண்ணாவே தன்னுடைய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, முதலில் உன்னை நினைத்து கதையை கேட்டு நடிகர் விஜய் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், தொடர்ந்து இதேபோல படம் செய்கிறோமோ..? என்ற ஒரு எண்ணம் எனக்கு தோன்றுகிறது.

ஆக்சன் படங்களில் நடிக்கலாமா..? என யோசனையில் இருக்கிறேன் என இயக்குனரிடம் கூறினார். அதை கேட்ட விக்ரமனும் சரி என்று ஒப்புக்கொண்டார்.

அதன் பிறகு நடிகர் விஜய் படத்திலிருந்து விலகிக் கொண்டார் அப்போது நடிகர் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர்கள் அப்பாஸ், பிரசாந்த் உள்ளிட்டோரின் பெயர்களை இயக்குனர் ஆலோசனை செய்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்த கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்த மிகவும் பொருத்தமாக இருக்கும் என தோன்றியது.

அப்போதுதான் நான்,. விஜய், சூர்யா ஆகியோர் பிரண்ட்ஸ் படத்தில் நடித்து முடித்து இருந்தோம். அப்போது சூர்யாவுடன் நான் நெருக்கமாக இருந்தேன். அப்பொழுது நடிகர் சூர்யாவுக்கு உடனே போன் செய்து… விக்ரமன் சார் படத்துல ஹீரோவா நடிக்க ஆள் தேடிகிட்டு இருக்காங்க.. உன்னோட பேரை யாருமே கன்சிடர் பன்னால.. இப்போ நீ என்ன பண்ற.. ஒரு பொக்கே வாங்கிக்கோ.. நான் சொல்ற நேரத்துல விக்ரமன் சாரை போய் பாரு.. கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கு.. அதுக்கப்புறம் நான் பார்த்துக்கிறேன் அப்படின்னு சொன்னேன்..

அதே மாதிரி நடிகர் சூர்யாவும் செய்தார்.. நானும்.. சார் அருமையான பையன் ஃப்ரண்ட்ஸ் படத்தில் இவருடைய திறமையை பக்கத்துல இருந்தே பாத்தேன். இந்த படத்திற்கு மிகவும் சரியான தேர்வாக இருப்பார் என்று விக்ரமன் அவரிடம் கூறினேன்.

அதன் பிறகு சில டெஸ்ட் சூட் நடந்தது.. உடனே நடிகர் சூர்யாவை இந்த படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்து விட்டார்கள். இப்படித்தான் ஹீரோ சூர்யாவுக்கு இந்த திரைப்பட வாய்ப்பு கிடைத்தது என பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் நடிகருமான ரமேஷ் கண்ணா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …