1 நிமிஷத்துக்கு 1 கோடி ரூபாய்.. திரிஷா நயன்தாராவை ஓரம் கட்டிய நடிகை..

முன்பெல்லாம் கதைக்காக படங்கள் உருவானதால் கதைக்களம், கேரக்டர்கள், தேவையான செலவுகள் என குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் படங்கள் எடுக்கப்பட்டன.

இப்போதெல்லாம் எடுக்கப்படும் சினிமாவில் பிரம்மாண்டத்தை காட்டி ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காகவும், ஹீரோக்களை மாஸ் ஆக காட்டுவதற்காகவும், ஏகப்பட்ட செலவுகளை செய்து பெரிய பட்ஜெட் படங்களாக எடுக்கின்றனர். அதேபோல் பெரிய அளவிலும் வசூலையும் குவித்து விடுகின்றனர்.

பட்ஜெட்டில் முக்கால்வாசி சம்பளம்

உதாரணமாக, இப்போதெல்லாம் 250 கோடி, 300 ரூபாய் ஒரு படத்தின் பட்ஜெட் என்றால், அந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், டைரக்டர், இசையமைப்பாளர், டெக்னீசியன்கள் என அவர்களுக்கான சம்பளமே 200 கோடி முதல் 250 கோடி ரூபாய்க்கு மேல் போய்விடுகிறது. மீதியில் படம் எடுக்க ஒதுக்கப்படும் செலவு என்பது வெறும் ஐம்பது கோடி ரூபாய்தான்.

அமரன் படத்தை தொடர்ந்து இப்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஒரு புதிய படத்தில், ஹீரோ சிவகார்த்திகேயன் சம்பளம் 30 கோடி ரூபாய், டைரக்டர் ஏஆர் முருகதாஸ் சம்பளம் 20 கோடி ரூபாய், படத்தின் இசையமைப்பாளர் அனிருத் சம்பளம் 7 கோடி ரூபாய் என மொத்தம் 57 கோடி ரூபாய்.

70 கோடியில் 57 கோடி

ஹீரோ, டைரக்டர், இசையமைப்பளர் என 3 பேருடைய சம்பளமாக போக, மீதியில் இந்த படம் உருவாக்க செய்யப்படும் செலவு 13 கோடி ரூபாய். ஏனெனில் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 70 கோடி ரூபாய் தான்.இப்படித்தான் தமிழ் சினிமாவின் நிலைமை இருக்கிறது.

அதாவது ஹீரோ நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர் போன்றவர்களுக்கு பெரும் அளவில் சம்பளத்தை கொட்டிக் கொடுத்துவிட்டு, வீதி இருக்கும் கொஞ்சம் பணத்தில் சில கோடிகளை வைத்து படம் எடுக்கும்போது அந்த படங்கள் எந்த அளவில் இருக்கும் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள முடியும்.

நடிகர் நடிகையின் சம்பளம் என்பது, அவர்கள் உழைப்புக்கேற்ற ஊதியமாக இல்லாமல், கொள்ளை லாபத்தில் தங்களது பங்கு என்ற அளவில் அவர்கள் இருக்கின்றனர்.

நஷ்டம் ஏற்பட்டால்…

ஆனால் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல படங்கள், மிக மோசமான நிலையில் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் போது, நடிகர், இயக்குனர் வாங்கிய பல கோடிகள் சம்பளத்தில், குறிப்பிட்ட தொகையை திருப்பித் தரப் போவதில்லை.

ஆனால் நஷ்டம் ஏற்பட்டால் தயாரிப்பாளர்கள் தான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் படத்தில் நடித்ததற்கு சம்பளம் என்ற வகையில் நடிகர்கள், நடிகைகள், டைரக்டர் லாபமடைந்து விடுகிறார்கள் என்பது தான் உண்மை.

நயன்தாரா, திரிஷா சம்பளம்

தமிழ் சினிமாவில் இப்போதைக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் போன்றவர்களின் சம்பளம் 100 கோடி ரூபாய் முதல் 200 கோடி ரூபாய் வரை இருக்கிறது.

நடிகைகளில் நயன்தாரா சம்பளம் இரட்டை இலக்க கோடிகளில் இருக்கிறது. அதாவது ஜவான் படத்துக்காக நயன்தாரா 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் என்றும், தக்லைப் படத்துக்காக திரிஷா 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இயக்குனர் மணிரத்னம் அடிமாட்டு சம்பளம் தான் கொடுப்பார் என்பதால், திரிஷாவுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாரா என்பதும் ஒரு சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

தி லெஜண்ட் பட நாயகி

இந்நிலையில் தமிழ் நடிகை ஒருவர், ஒரு படத்தில் நடிக்க ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஊர்வசி ரௌட்டல

தி லெஜண்ட் படத்தில் சரவணன் ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடித்தவர் ஊர்வசி ரௌட்டல. இவர் தி லெஜண்ட் படத்தில் நடிக்க 20 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார் என்று கூறப்படுகிறது.

தற்போது தெலுங்கில் நடிகர் ராம் நடித்த ஸ்கந்தா என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில், ஊர்வசி ரௌட்டல நடனம் ஆடி இருக்கிறார். இந்த பாடல் காட்சியில் அவர் நடனம் ஆடுவதற்கு, 3 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருக்கிறார்.

ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி ரூபாய்

இந்தப் பாடல் காட்சி மூன்று நிமிடங்கள் என்ற நிலையில், ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் என்று சம்பளம் பெற்று மொத்தமாக மூன்று நிமிடத்திற்கு மூன்று கோடி ரூபாய் என்று ஊர்வசி ரௌட்டல சம்பளம் பெற்றுள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 நிமிஷத்துக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி திரிஷா நயன்தாராவையே ஓரம் கட்டி விட்டாரே நடிகை ஊர்வசி ரௌட்டல என்றும் தமிழ் சினிமாவே ஆச்சரியத்தில் இருக்கிறது.

   

--Advertisement--