Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

நடிகை ஊர்வசியின் மகளா இது..? அழகின் அம்மாவை மிஞ்சிட்டாங்களே..!

சில நடிகைகளை உதாரணமாக குறிப்பிட்டு அவரை போன்ற நடிகையாக சினிமாவில் நடித்து பெயர், புகழ் பெற வேண்டும் என்று சிலர் சொல்வதுண்டு. ஏனெனில் கவர்ச்சியை நம்பாமல் நடிப்பை மட்டுமே எப்போதுமே நம்பி வெற்றி பெற்ற நடிகைகளாக அவர்கள் இருக்கின்றனர். அதனால் எப்போதுமே நடிப்புதான் அவர்களது முதல் அடையாளம். அந்த அங்கீகாரமே அவர்கள் பெயரை சினிமாவில் நிலைத்து நிற்கச் செய்கிறது.

ஊர்வசி

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகையாக, ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை ஊர்வசி. முந்தானை முடிச்சு படம் மூலம் டைரக்டர் கே பாக்யராஜ் ஊர்வசியை அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து ஊர்வசி பல முன்னணி ஹீரோக்களுடன் தமிழில் நடித்து முக்கிய நடிகையாக மாறினார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் அவர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருக்கிறார்.

நடிப்பு ராட்சசி

நடிகர் கமல்ஹாசன் நடிகை ஊர்வசியை நடிப்பு ராட்சசி என்று குறிப்பிடுவார். அந்த அளவுக்கு நடிப்பில் மிக எதார்த்தமாக, தன்னுடைய கேரக்டரின் உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த நடிகை தான் ஊர்வசி.

--Advertisement--

தமிழில் பல படங்களில் ஊர்வசி நடிப்பு மிகச் சிறப்பாக இருந்திருக்கிறது. குறிப்பாக மைக்கேல் மதன காமராஜன், நான் பெத்த மகனே, ஆயுத பூஜை, எட்டுப்பட்டி ராசா, அந்த ஒரு நிமிடம், மாயா பஜார், உத்தம வில்லன், இரட்டை ரோஜா, வனஜா கிரிஜா, ஆணழகன், மகளிர் மட்டும், பாட்டி சொல்லைத் தட்டாதே, சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேங்க உள்ளிட்ட பல படங்களில் ஊர்வசி நடிப்பு மிக சிறப்பாக இருந்திருக்கிறது.

மனோஜ் கே ஜெயன்

ஊர்வசி கடந்த 2000 ஆம் ஆண்டில் மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் தரணி இயக்கிய தூள் படத்தில் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்திருப்பார். அதேபோல் விஜய் நடித்த திருமலை படத்தில் வில்லனாக அரசு என்ற கேரக்டரில் நடித்திருப்பார்.

மகள் தேஜாலட்சுமி

மனோஜ் கே ஜெயன் – ஊர்வசி தம்பதிக்கு தேஜாலட்சுமி என்ற மகள் உள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் மனோஜ் கே ஜெயனும், ஊர்வசியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டனர்.

அதன் பிறகு ஊர்வசி சிவப்பிரசாத் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.

அழகான மகள்

இந்நிலையில் ஊர்வசி தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.

அதில் ஊர்வசியின் அழகான மகளைப் பார்த்த ரசிகர்கள், நடிகை ஊர்வசியின் மகளா இவங்க, தேஜா லட்சுமி அழகில் அம்மாவை மிஞ்சி விட்டாரே என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top