“உங்கள் வீட்டு தோட்டத்தில் வளர்க்கும் செடி..!” – தரும் நன்மைகள் தெரியுமா?

பெரும்பாலும் சொந்த வீடு மற்றும் வாடகை வீட்டில் இருந்தாலும் குறிப்பிட்ட அளவு செடிகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிறைய நபர்கள் இருப்பார்கள்.மேலும் இந்த செடிகளை வளர்ப்பதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகிறது என்பது சிலருக்கு அது தெரியாது.

அப்படிப்பட்டவர்கள் இந்த கட்டுரையை படிப்பதின் மூலம் உங்களுக்கும் செடிகளால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பதை எளிதில் தெரியவரும்.

செடிகளால் ஏற்படக்கூடிய நன்மைகள்

உங்கள் வீட்டு தோட்டத்தில் நீங்கள் செடி, கொடிகளை வளர்ப்பதின் மூலம் காற்றில் இருக்கும் நச்சுத்தன்மையை இது சுத்தம் செய்வதோடு உங்களுக்கு தேவையான சுத்தமான பிராணவாயுவை அதிக அளவு வெளியிடும்.

எனவே நீங்கள் வாங்கும் செடிகள் அழகுக்கு மட்டுமல்லாமல் வீட்டுக்குள் வைக்கப்படக்கூடிய செடிகளால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை புரிந்து அதற்கு தக்கவாறு நீங்கள் செடிகளை தேர்வு செய்ய வேண்டும்.

உங்கள் வீட்டில் இருக்கும் சிறிய அறைகளில் நீங்கள் வைக்கக்கூடிய செடிகளில் முட்கள் இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி முட்கள் உள்ள செடிகளை உங்கள் வீட்டுக்குள் இருக்கும் அறைகளில் வைப்பதை நீங்கள் தவிர்த்து விடுங்கள்.

---- Advertisement ----

குறிப்பாக இந்த முட்கள் இருக்கக்கூடிய செடிகள் மற்றும் நட்சத்திர வடிவத்தில் இருக்கக்கூடிய செடிகளை நீங்கள் உங்கள் வீட்டின் ஹாலில் வைப்பது சிறப்பாக இருக்கும்.

மேலும் வட்டமாகவும் நெகிழ்வுத் தன்மையோடு இருக்கக்கூடிய இலைகளை கொண்ட செடிகள் உங்களுக்கு அமைதி, நிம்மதியை தரும். அப்படிப்பட்ட செடிகளை தேர்வு செய்து நீங்கள் உங்கள் வீட்டுக்குள் வைப்பது மிகவும் சிறப்பானதாகும்.

வீட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைகளில் வைக்கக்கூடிய தாவரங்களை தேர்வு செய்து வளர்ப்பதின் மூலம் உங்களுக்கு வாஸ்து குறைபாடு ஏதும் ஏற்படாது.

சூரிய ஒளி அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளில் நீங்கள் விண்டோஸ் பக்கத்தில் செடிகளை வைக்கலாம் .எனவே குறிப்பாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் சூரிய கதிர்கள் விழக்கூடிய இடங்களில் நீங்கள் செடிகளை வைப்பது மிகவும் நல்லது.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கக் கூடிய குறிப்புக்களை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வீடுகளில் உள்ளேயும், வெளியேயும் செடிகளை தேர்வு செய்து வளர்த்துவதின் மூலம் மிகச் சிறந்த நன்மைகளை பெற முடியும்.

---- Advertisement ----