மகள் மாதிரி பழகிட்டு அவளையே கல்யாணம் பண்ணலாமா… பாலு மகேந்திராவால் அதிர்ச்சியான வடிவுக்கரசி!..

மகள் மாதிரி பழகிட்டு அவளையே கல்யாணம் பண்ணலாமா… பாலு மகேந்திராவால் அதிர்ச்சியான வடிவுக்கரசி!..

தமிழில் இப்போது எப்படி வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களாக இயக்குனர் செல்வராகவன், பா ரஞ்சித், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் இருக்கிறார்களோ அதே போலவே முந்தைய கால கட்டங்களில் முக்கிய இயக்குனராக இருந்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா.

பாலு மகேந்திராவை பொறுத்தவரை சினிமாவில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று மிக அதிகமாக ஆசைப்பட்டார். அதனை தொடர்ந்து பாலு மகேந்திரா தமிழில் மாறுபட்ட கதைகளத்தை இயக்க துவங்கினார். அப்படி அவர் இயக்கிய பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

பாலு மகேந்திரா:

இருந்தாலும் ஒரு பக்கம் அவர் ஆக்ஷன் திரைப்படங்களை இயக்கினால் நன்றாக இருக்கும் என்றும் மக்கள் ஆசைப்பட்டனர். அதனை தொடர்ந்துதான் பாலு மகேந்திரா நீங்கள் கேட்டவை என்கிற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படமும் கொஞ்சம் வித்தியாசமான படமாகதான் இருந்தது.

மகள் மாதிரி பழகிட்டு அவளையே கல்யாணம் பண்ணலாமா… பாலு மகேந்திராவால் அதிர்ச்சியான வடிவுக்கரசி!..

சொல்ல போனால் பாலு மகேந்திரா திரைப்படத்தில் பெரிதாக வெற்றியை கொடுக்காத ஒரு திரைப்படமாக நீங்கள் கேட்டவை திரைப்படம்தான் இருந்தது. ஆனால் அவர் இயக்கிய வீடு மூன்றாம் பிறை மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற படங்களாகும்.

எவ்வளவுக்கு சினிமாவில் ஒரு முக்கிய இயக்குனராக பாலு மகேந்திரா இருந்தாரோ அதேபோல அதிக சர்ச்சைக்கு உள்ளான ஒரு இயக்குனராகவும் அவர் இருந்து வந்தார். இந்த நிலையில் பாலு மகேந்திரா குறித்து நடிகை வடிவுக்கரசி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

மகள் போன்ற நடிகை:

அதில் அவர் கூறும் பொழுது பாலு மகேந்திரா செய்த விஷயங்கள் எனக்கு ஒரு வகையில் அதிர்ச்சியைதான் கொடுத்தன என்று கூறியிருக்கிறார். வடிவுக்கரசியும் தமிழ் சினிமாவில் வெகுகாலங்களாகவே இருந்து வருகிறார். பாலு மகேந்திரா இயக்குனராக இருந்த காலகட்டங்களில் இளம் நடிகையாக இருந்து வந்தார் வடிவுக்கரசி.

அப்பொழுது அவர் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் இப்படி பிரபல நடிகையாக இருந்த காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்த சோபாவுடன் வடிவுக்கரசிக்கு நட்பு ஏற்பட்டது. ஏணிப்படிகள் என்கிற திரைப்படம் மூலமாக சோபாவிற்கும் வடிவுக்கரசிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

மகள் மாதிரி பழகிட்டு அவளையே கல்யாணம் பண்ணலாமா… பாலு மகேந்திராவால் அதிர்ச்சியான வடிவுக்கரசி!..

அதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினார்கள். பசி படத்துக்காக ஷோபா தேசிய விருது பெற்றார். மிக சிறு வயதிலேயே தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்ற நடிகையாக அப்பொழுது சோபா இருந்தார்.

அதிர்ச்சியான வடிவுக்கரசி:

அதற்காக அவரிடம் நேரில் வாழ்த்துக்களை சொல்வதற்காக வடிவுக்கரசி சென்று இருக்கிறார். அப்பொழுது சோபா பாலு மகேந்திராவை திருமணம் செய்து கொண்டதாக கூறி இருக்கிறார். அதனை கேட்ட பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறுகிறார் வடிவுக்கரசி.

ஏனெனில் ஒருமுறை பாலு மகேந்திரா இலங்கையில் இருந்து வரும் பொழுது சோபாவிற்கு பரிசு பொருட்கள் வாங்கி வந்திருந்தார். அதில் அன்பு மகளே என்று எழுதிதான் அவருக்கு பரிசை கொடுப்பார். அப்படி மகள் மாதிரி பழகிட்டு பிறகு சோபாவையே திருமணம் செய்து கொண்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்று கூறுகிறார் பாலுமகேந்திரா.