“Wow.. வைரமுத்து..” – புரிஞ்சவன் பிஸ்தா… பங்கம் பண்ணிய சின்மயி.. – தீயாய் பரவும் பதிவு..!

பாடகி சின்மயி ( Chinmayi ) வைரமுத்துவின் இலக்கிய பொன்விழாவை முன்னிட்டு “வைரமுத்து இலக்கியம்-50” என்னும் இலட்சினையை தமிழக முதல்வர் இன்று வெளியிட்டார்.. இதற்கு சின்மயி உள்ளிட்ட சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு தெய்வம் தந்த பூவே” என்ற பாடலின் மூலம் திரைப் பயணத்தை தொடங்கியவர் சின்மயி, மணிரத்தினம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் மூலம் அவர் அறிமுகமானார்.

தனது முதல் பாடலிலேயே சிறந்த பாடகி என்ற முத்திரையை பதித்தார் சின்மயி, அடுத்தடுத்து பல படங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் தொடர்ச்சியாக பாடல்களை பாடினார். இசைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் எந்த கவிஞரின் பாடலை பாடி தனது இசைப் பயணத்தை தொடங்கினாரோ அந்த கவிஞர் மீது அவர் வைத்த குற்றச்சாட்டு ஒட்டுமொத்த திரையுலகம் அதிர்ச்சி அடைய வைத்தது.

அது அவரது இசை வாழ்க்கைக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மீடு ஹாஸ்டாக் உலகம் முழுவதும் பிரபலமானது, அப்போது அந்த ஹாஸ்டாக்குடன் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை சமூக வலைதளத்தில் பலரும் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

அந்த வரிசையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக சின்மயி பதிவிட்டார். இது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

---- Advertisement ----

இந்நிலையில் இன்று வைரமுத்துவின் இலக்கிய பொன்விழாவை முன்னிட்டு “வைரமுத்து இலக்கியம்-50” என்னும் இலட்சினையை தமிழக முதல்வர் வெளியிட்டார்.. இதற்கு சின்மயி உள்ளிட்ட சிலர் முதல்வருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

---- Advertisement ----