‘எதிர்த்து வாள் வீச ஆள் இல்லையே’ – போட்டிக்கு ஆள் இல்லாததால் ஏங்கும் வைரமுத்து

தமிழ் சினிமாவில், கவிதை நாயகனாக வலம்வருபவர் கவிஞர் வைரமுத்து. கண்ணதாசன் கவியரசு என்றால், இவர் கவிப்பேரரசு என, அழைக்கப்படுகிறார்.
பலமுறை தேசிய விருது பெற்ற சிறந்த பாடலாசிரியர். இதுதவிர கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் உள்ளிட்ட முக்கிய படைப்புகளை நூல்களாக தந்தவர்.

அவ்வப்போது, தனது மனதில் தோன்றும் உணர்வுகளை, நாட்டு நடப்புகளை அவ்வப்போது சமூக சிந்தனை வரிகளாக கவிதையாக்கி பதிவிடுவார்.
வைரமுத்து எழுதுவதைப் போலவே, பேச்சாற்றலிலும் சிறந்தவர். எனவே, சினிமா சாராத பல பொதுநிகழ்ச்சிகளில் வைரமுத்து கலந்துகொண்டு பேசுவார்.

தனது கம்பீரமான பேச்சில், பார்வையாளர்களுக்கு உரமேற்றுவார். இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி தருவார். மாணவர்களுக்கு, தன்னம்பிக்கை ஏற்படுத்துவார்.

சமீபத்தில், வைரமுத்துவின் டுவிட்டர் பதிவு ஒன்று செம வைரலாகி வருகிறது.
அந்த டுவிட்டர் பதிவில் வைரமுத்து கூறியிருப்பது…

கமல் இருக்கும் வரை, ரஜினிக்கும்
ரஜினி இருக்கும் வரை, கமலுக்கும்
விஜய் இருக்கும் வரை, அஜித்துக்கும்
அஜித் இருக்கும் வரை, விஜய்க்கும்
ஒரு பிடிமானம் இருக்கும்.!
எனக்கிருந்த பிடிமானத்தைப் பிய்த்துக்கொண்டு போய்விட்டீர்களே வாலி அவர்களே…
காற்றில் கத்தி சுற்றிக் கொண்டிருக்கிறேன்,

---- Advertisement ----

என்று அந்த பதிவில் கூறி இருக்கிறார்.

அதாவது, கமல்- ரஜினி, விஜய் – அஜித் என, அவர்களுக்குள் இருக்கும நடிப்பு போட்டியால், ஒரு பிடிமானம் அதாவது வெற்றி பெறும் லட்சியம் இருக்கும். அப்படி, நான் போட்டியிட தகுதியாக இருந்த நீங்கள் (வாலி) மறைந்து விட்டதால், எனக்கு எதிர்த்து போட்டியிட ஆள் இல்லாமல், காற்றில் கத்தியை வீசும் நிலையில் இருக்கிறேன். என்ற சிந்தனையை பதிவிட்டுள்ளார்.

இது கவிஞர் வாலி மீது கவிஞர் வைரமுத்து கொண்டுள்ள மரியாதை, அன்பையும் ஒரு விதத்தில் குறிப்பிடுகிறது.

---- Advertisement ----