வெளியானது “வலிமை” ட்ரெய்லர்..! – அதிரும் இன்டர்நெட்..! – ரசிகர்கள் கொண்டாட்டம்..!

நடிகர் அஜித்தின் ரசிகர்கள் இனி ‘வலிமை அப்டேட்’ என எங்கும் குரல் எழுப்ப மாட்டார்கள். படம் 2022க்கு வெளிவர உள்ள நிலையில் படத்தின்  படத்தின் டிரைலர் ( Valimai Trailer ) தற்போது வெளியாகியுள்ளது.

படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜீ ஸ்டுடியோஸ், “பெரிதாக ஒன்று வரப் போகிறது, இந்த இடத்தைப் பாருங்கள், வலிமை மிகப் பெரிய அப்டேட்,” என முதலில் அறிவித்திருந்தது. சற்று முன்னர், ‛‛இனி அமைதி காக்க முடியாது,. காத்திருப்பு முடிந்தது. வலிமை டிரைலர் மாலை 6.30 மணிக்கு வெளியாகும்” என ஜீ ஸ்டுடியோஸ் அறிவித்திருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் விஜய், அஜித் ஆகியோர் நடிக்கும் படங்களின் டீசர், டிரைலர் வெளியாகும் போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இரண்டு ரசிகர்களும் ஒருவருக்கொருவர் சூடாக சண்டையிட்டுக் கொள்வார்கள்.

இதற்கு முன்பு வெளிவந்த விஜய் நடித்த ‘மாஸ்டர்’ டீசர் வெளிவந்த போது புதிய சாதனைகள் சிலவற்றைப் படைத்தது. இப்போது அஜித் நடித்துள்ள ‘வலிமை’ டிரைலர் வரப் போகிறது.

இது முந்தைய விஜய் படங்களின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைக்கப் போகிறதா..? என்ற எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்களிடம் உள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …