பீரியட்ஸ் நேரம் என்பதால் தான் அப்படி ஆகிடுச்சு.. ஆனால்… – விளாசும் வாணி போஜன்..!

நடிகை வாணி போஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு நேர்ந்த அசௌகரியம் குறித்து ஓப்பனாக பேசியுள்ளார். சீரியல் நடிகையாக இருந்து தற்போது சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பவர் நடிகை வாணி போஜன்.

இடையில் நடிகர் ஜெய் உடன் காதலில் இருந்தார். திருமணமே செய்து கொள்ளாமல் அவருடன் வாழ்ந்து வருகிறார் என்று கூட தகவல்கள் வெளியாகி வைரலாகின. ஆனால், அவை உண்மை கிடையாது என்று கூறினார் வாணி போஜன்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வாணி போஜனிடம் நீங்கள் பார்த்து கடுப்பான உங்களை பற்றிய வதந்தி அல்லது கிசுகிசு பற்றி கூறுங்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த நடிகை வாணி போஜன், ஒரு முறை பீரியட்ஸ் நேரம் என்பதால் எனக்கு உடல் நலம் சரியில்லை. இதனால், ஓய்வில் இருந்தேன். அப்போது என்னுடைய முகம் வீங்கியது போல ஆகி விட்டது.

அந்த நேரத்தில் தவிர்க்க முடியாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது எடுக்கப்பட்ட என்னுடைய புகைப்படங்களை வைத்து, பிளாஸ்டிக் சர்ஜரி தவறானதால் வாணி போஜனின் முகம் இப்படி ஆகி விட்டது என தகவல்கள் பரவியது.

இந்த செய்தியை பார்க்கும் போது யாருடா நீங்கலாம்.. என்று கடுப்பானேன். பொதுவாக பீரியட்ஸ் நேரங்களில் உடல் நிலை வழக்கத்திற்கு மாறாக இருப்பது இயற்க்கை. கை கால் முகம் போன்ற உறுப்புகள் வீங்கியது போல காட்சியளிப்பது இயற்க்கை தான்.

ஆனால், அதனை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன் என்றும் அது தவறாக சென்றதால் என் முகம் இப்படி ஆகி விட்டது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று விளாசியுள்ளார் நடிகை வாணி போஜன்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …