தெய்வமகள் சீரியல் சத்யப்ரியா கேரக்டர் தான் வாணி போஜனை தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்தியது. அதனால் தானோ என்னவோ மார்டன் உடைகளைக் காட்டிலும் சேலையில் வரும் வாணியின் புகைப்படங்கள் உடனே வைரலாகிவிடுகின்றன.
கடந்த 2020ம் ஆண்டு வெளியான ”ஓ மை கடவுளே” திரைப்படத்துக்குப் பிறகு, “ட்ரிப்பிள்ஸ்”, “லாக் அப்”, “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்” போன்ற வெப் சீரீஸ் மற்றும் ஒடிடி படங்களில் நடித்து வருகிறார்.”பகைவனுக்கு அருள்வாய்”, “மஹான்”, “கேசினோ” உள்ளிட்ட இவரது அரை டஜன் படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.
தமிழ் சினிமாவில் தற்சமயம் பிஸியான ஹீரோயீன்களில் ஒருவராக உள்ளார் வாணி போஜன்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் ஃபாலோயர்களுக்கும் மேல் வைத்திருக்கும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எப்போதுமே ட்ரெண்டிங் ரகங்கள்.
அதிலும் சில்வர் நிற புடவையில், லூஸ் ஹேர் விட்டு படு கேசுவலாக வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்களுக்கு ஹார்ட்டின்களை வாரி இரைத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அவரை சேலை கட்டுன குல்ஃபி ஐஸ்.. என்று வர்ணித்து வருகின்றனர்.