சின்னத்திரையின் நயன்தாரா என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுபவர் வாணி போஜன் ( Vani Bhojan ) இவர் 1988ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி பிறந்தவர்.
இவரது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் ஊட்டி இவர் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் இல் பணிப்பெண்ணாக பணி புரிந்திருக்கிறார் பிறகு மாடலிங் துறை மற்றும் விளம்பரப் படங்கள் நடித்துள்ளார்.
இவர் முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் பின்பு ஜெயா தொலைக்காட்சியில் மாயா என்ற தொடரும் சன் டிவியில் தெய்வமகள் என்ற சீரியலிலும் நடித்துளளார் இதில் சன் டிவியில் நடித்த தெய்வமகள் சீரியல் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் உருவாக்கினார்.
பின்பு இவர் காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார்.இவர் முதன்முதலில் வெள்ளித்திரையில் ஒரு இரவு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் பின்பு அதிகாரம் 79 என்ற படத்திலும் ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டூ அம்னீசியா திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் இவர் ஒரு வெப் சீரியஸிலும் நடித்திருக்கிறார் மேலும் இவர் தமிழ் சினிமாவில் பாயும் ஒளி நீ எனக்கு ,பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, சியான் 60 மற்றும் பெயரிடாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
மேலும் இவர் சோசியல் மீடியாக்களில் மிக ஆக்டிவாக இருக்கிறார் அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறார் இந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.
வொண்டர் வுமன் கதாபாத்திரத்தில் நடித்த “Gal Gadot” அணிந்திருந்த உடைகளை போன்ற உடைகளை அணிந்து கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், ஹாலிவுட் லெவல்.. என்று வர்ணித்து வருகிறார்கள்.