சின்னத்திரை நயன்தாரான்னா.. சும்மாவா.. இணையத்தை கலக்கும் வாணி போஜன்..!

சின்னத்திரையை தொடர்ந்து, தமிழ் திரைப்படங்களில் கலக்க துவங்கியுள்ள நடிகை வாணி போஜன், அடிக்கடி அசத்தல் போட்டோ ஷூட் செய்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

சின்னத்திரையிலும் சரி, வெள்ளித்திரையில் சரி தனக்கு ஏற்ற போல் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும், வாணி போஜன் அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், தற்போது  வாணி போஜன் காட்டுக்குள் எடுத்து கொண்ட  சில புகைப்படங்களை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.குறிப்பாக இந்த புகைப்படங்களில் செம்ம கூலாக… கூலிங் கிளாஸ் போட்ட அழகியாக ஜொலிக்கிறார் வாணி போஜன்.

சின்னத்திரை நயன் என்கிற பெயருக்கு ஏற்ற போல் தினுசு தினுசாக போஸ் கொடுத்து அசத்தியுள்ள இந்த புகைப்படங்கள் தான் இவை.தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்ற, இளம் நடிகைகள் கவர்ச்சியில் கால் பாதிக்கும் நிலையில், வாணி போஜனோ தன்னுடை மிடுக்கான அழகை எதார்த்தமாக வெளிப்படுத்தும் விதமாகவே இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன் அசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இந்த படத்தில் வாணிபோஜனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ்விற்கு ஜோடியாக லாக்கப் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும், ஆதவ் கண்ணதாசனின் படத்திலும் நடிக்க வாணி போஜனை ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும் சூர்யா தயாரிப்பில் உருவாக உள்ள படத்திலும், பிக்பாஸ் ரம்யா பாண்டியனுடன் சேர்ந்து நடிக்க உள்ளார்.

சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர், தற்போது மிதமான மேக்அப் போட்டு… சல்வாரில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் தாறுமாறாக பார்க்கப்பட்டு வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு முக்கிய இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கும் சரண்யா …