என்ன கன்றாவி இது..? – “மஹான்” படத்தில் சிம்ரன், வாணி போஜன் பெயர்கள் – நமட்டு சிரிப்பு சிரிக்கும் நெட்டிசன்கள்..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘மகான்’. இந்நிலையில், Mahaan Cast என தேடினால் நடக்கும் கூத்து வைரலாகி வருகின்றது. துருவ் விக்ரம், வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த், தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்துள்ள, இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.

ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், நேபாளம், டார்ஜிலிங், சென்னை போன்ற பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டது.

இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. மூன்று மொழிகளில் வெளியாகப்போகும் இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோ OTT இயங்குதளத்தில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் போஸ்டர்ஸ் தினமும் வெளியானது. இந்நிலையில் இன்று இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘கள்ளுக்கடையை ஒழிப்போம்’ என்ற வசனத்துடன் இப்படத்தின் டீசர் தொடங்குகிறது, மதுவை ஒழிக்கவும், சுதந்திரத்திற்காகவும் போராடிய காந்தி மகான் போல வாழ வேண்டும் என இளம் வயதாக இருக்கும் விக்ரமிடம் அவரது தந்தை கட்டளையிடுகிறார்.

பின்னர் பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளுடன் டீசர் நகர்கிறது. இந்த டீசர் ரசிகர்களிடம் அதிக கவனத்தை பெற்று வருகிறது. நீண்ட நாட்களாக விக்ரம் படம் வெளிவராமல் இருந்த நிலையில் இப்படம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைய இருக்கிறது.

கதாபாத்திரங்களில் பெயர்கள்..

இந்த படத்தில் சிம்ரன் மற்றும் சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், கூகுளில் “Mahaan Cast”  என தேடினால் இவர்களுடைய கதாபாத்திரங்களில் பெயர் இது தான் என கூகுள் ரிசல்ட் ஒன்று வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், என்னங்கடா கேரக்டர் நேம் இது.. என்று நமட்டு சிரிப்பு சிரித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …