சின்னத்திரை நயன்தாரா என வர்ணிக்கப்படுபவர் வாணி போஜன் ( Vani Bhojan ) விளம்பர படங்களில் நடித்து, டிவி சீரியல்களில் அறிமுகமாகி, இப்போது சினிமா நடிகையாகவும் வலம் வருகிறார்.விளம்பர படங்களில் நடித்து, அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாணிபோஜன். விஜய் டிவியில் ‘ஆஹா’ தொடர் மூலம் அறிமுகமானார். அதன்பின் தெய்வமகள் சீரியலில் நடித்து, மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.வாணிபோஜன், தன் அழகிய தோற்றத்தாலும், திறம்பட்ட நடிப்பாலும் சினிமாத் துறையிலும் தன் காலடியை பதித்தார்.
லாக்கப், ஓ மை கடவுளே, மகான், காசிமேடு, ஆர்யன், லவ், காசினோ உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களிலும் இடம்பிடித்தார். இதுதவிர சில வெப் சீரியல்களிலும், வாணிபோஜன் நடித்தார். அப்போது நடிகர் ஜெய் உடன் வெப் சீரியலில் நடித்த போது, அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.அதன்பின், நடிப்பில் போதிய கவனத்தை செலுத்தாமல், காதல் மயக்கத்தில் ஜெய் உடனே எப்போதும் ககாணப்பட்டார் வாணிபோஜன்.
இந்நிலையில், இவரை தேடிவந்த பட வாய்ப்புகள், சீரியல் வாய்ப்புகள் அனைத்தும் கைநழுழுவிப்போனது. ஏற்கனவே, ஜெய் உடன் காதலில் விழுந்த அஞ்சலி, ஒரு காலகட்டத்துக்கு பிறகு, சினி பீல்டை விட்டே காணாமல் போனார். அதன்பிறகு, தன்னை சுதாரித்துக்கொண்டு ஐட்டம் பாடல்களில் ஆடி, தனது மார்க்கெட்டை தக்க வைக்க முயற்சித்தார். தமிழ் சினிமா கண்டுகொள்ளாத நிலையில் தெலுங்கில், சில படங்களில் நடித்து வருகிறாா்.
சில மாதங்களுக்கு முன் இந்த உண்மையை உணர்ந்துகொண்ட வாணி போஜன், தனக்கும் அஞ்சலி நிலை வந்துவிடுமோ என்பதை புரிந்துகொண்டு, ஜெய்யை விட்டு அதிரடியாக விலகினார்.
இப்போது, அவரவர் பாதையில் சினிமா வாய்ப்புகளை தேடி ஓடிக்கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ஜெய், நயன்தாராவின் 75வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் இருந்து, அவர் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு இன்னிங்ஸ் துவங்க வாய்ப்புள்ளது.
ஆனால், வாணி போஜனுக்கு சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் எதுவும் இதுவரை அமைந்ததாக தெரியவில்லை. எனினும், சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறார்.
உடலின் பெரும்பாலான பாகங்கள் அப்பட்டமாக தெரியும் தனது கிளாமரான புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு., இளசுகளை சூடேற்றி விடுகிறார். சமீபத்தில் வாணிபோஜன் வெளியிட்ட இ்ந்த படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இப்படிப்பட்ட புகைப்படங்களை பார்த்து, அசந்து போகும் ரசிகர்கள், வாணி போஜனை பெரிய திரையில் காண்பது எப்போது என தவம் இருக்க துவங்கி விட்டனர்.வாணி போஜனுக்கு தொடர்ந்து விளம்பர படங்களில் நடிக்க அதிக வாய்ப்பு வரும் நிலையில், சினிமா வாய்ப்புகள் என்பது தள்ளிக்கொண்டே போகிறது.
அவரும் விடா முயற்சியாக தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, ரசிகர்களை மயக்கத்திலேயே வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.