வனிதாவுடன் திருமணம்..? ஹனிமூனுக்கு டேட் பிக்ஸ் பண்ணி.. சைலாண்டாக சம்பவம் பண்ண ஸ்டார் நடிகர்..!

வனிதாவுடன் திருமணம்..? ஹனிமூனுக்கு டேட் பிக்ஸ் பண்ணி.. சைலாண்டாக சம்பவம் பண்ண ஸ்டார் நடிகர்..!

தமிழ் சினிமா பிரபலங்களில் அதிக சர்ச்சையான நடிகையா வனிதா விஜயகுமார் இருந்து வருகிறார். வனிதா விஜயகுமார் ஆரம்பத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். ஆனால் அவருக்கு அப்பொழுது வாய்ப்புகள் என்பது தொடர்ந்து கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து சினிமாவை விட்டு விலகி இருந்த வனிதா தொடர்ந்து திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் அவருக்கு திருமண வாழ்க்கை அவ்வளவு சுமுகமாக அமையவில்லை. தொடர்ந்து விவாகரத்துகளே அவரது வாழ்க்கையில் அதிகமாக இருந்து வந்தது.

இதனாலேயே விவாகரத்து நடிகை என்று தொடர்ந்து வனிதாவை பலரும் அழைத்து வந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் நடிகை வனிதா விஜயகுமார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு  வரவேற்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம் அவரது குணம்தான்.

பிக்பாஸில் வாய்ப்பு:

யாராக இருந்தாலும் அவர்களிடம் சண்டை போடும் குணம் கொண்டவர் வனிதா. அப்படிப்பட்ட குணம் கொண்டவர் பிக்பாஸிற்கு சென்றார் எனில் சொல்லவா வேண்டும். அந்த நிகழ்ச்சி முழுக்கவே தொடர்ந்து இருந்த போட்டியாளர்கள் அனைவருடனும் சண்டை போட்டார் வனிதா.

வனிதாவுடன் திருமணம்..? ஹனிமூனுக்கு டேட் பிக்ஸ் பண்ணி.. சைலாண்டாக சம்பவம் பண்ண ஸ்டார் நடிகர்..!

இதனால் அவர் அதிக பிரபலமான ஒருவராக மாறினார் பிறகு யூ ட்யூப் சேனல்கள் பலவும் அவரை பேட்டி எடுக்க தொடங்கியது. இதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார். மேலும் விஜய் டிவியும் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளில் வாய்ப்புகளை வழங்கி வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் கதாநாயகியாக வனிதா நடித்த திரைப்படம் வைஜெயந்தி ஐ.பி.எஸ். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அந்த விழாவில் பவர் ஸ்டார் சீனிவாசனும் கலந்து கொண்டார்.

இருவரும் சேர்ந்து நடித்த படம்:

ஏற்கனவே பவர் ஸ்டார் சீனிவாசனும் வனிதாவும் சேர்ந்து பிக்கப் என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். அந்த திரைப்படத்தில் நடித்த பொழுது அவர்கள் இருவருக்கும் திருமணமானது போன்ற ஒரு புகைப்படம் வெளியானது.

வனிதாவுடன் திருமணம்..? ஹனிமூனுக்கு டேட் பிக்ஸ் பண்ணி.. சைலாண்டாக சம்பவம் பண்ண ஸ்டார் நடிகர்..!

அதனை பார்த்த பலரும் இருவரும் நிஜமாகவே திருமணம் செய்து கொண்டனர் என்று பேச்சுக்கள் இருந்தன. இந்த நிலையில் இதுகுறித்து அந்த மேடையில் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன் வனிதா என்னுடைய தோழி என்று கூறினார்.

உடனே அதற்கு பதில் அளித்த வனிதா நமக்கு திருமணமே செய்து வைத்து விட்டார்கள். என்ன தோழி என்று கூறுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். மேலும் அவர் பேசும் பொழுது திருமணம் ஆனதோடு சரி அதற்கு பிறகு எங்கள் இருவருக்கும் எதுவுமே நடக்கவில்லை என்று வனிதா இரட்டை அர்த்தத்தில் ஒரு பதிலைக் கூறி இருந்தார்.

அதற்கு பதில் அளித்த சீனிவாசன் சொல்லும் பொழுது எங்கே ஏதும் நேரம் இருந்தால் தானே நடக்கும். நீங்கள் தாய்லாந்து என்று ஒரு பக்கம் சுற்றி வருகிறீர்கள் நான் ஒரு பக்கம் சுற்றுகிறேன். இருவரும் முதலில் அதற்கு ஒரு தேதியை பிக்ஸ் பண்ணுவோம் என்று கூறினார். அதனை அடுத்து இந்த பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாக துவங்கியிருக்கின்றன.