Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

எலும்பே உடஞ்சி போச்சு.. அந்த இடத்தில் ஆக்ரோஷமாக தாக்கிய நடிகர்.. ஓப்பனாக கூறிய வரலட்சுமி சரத்குமார்..!

Tamil Cinema News

எலும்பே உடஞ்சி போச்சு.. அந்த இடத்தில் ஆக்ரோஷமாக தாக்கிய நடிகர்.. ஓப்பனாக கூறிய வரலட்சுமி சரத்குமார்..!

நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமார். ஆனால் இவர் ராதிகாவின் மகள் அல்ல. சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி தான் இவரது அம்மா. இவருக்கு தங்கை ஒருவரும் இருக்கிறார்.

வரலட்சுமி சரத்குமார்

வரலட்சுமி சரத்குமார் போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.சர்கார், சண்டக்கோழி 2, கன்னிராசி 2, மாரி 2, நீயா 2, சேஸிங், காட்டேரி, நிபுணன், சத்யா, இரவின் நிழல், மதகஜ ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் வரலட்சுமி சரத்குமார். இப்போது தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கு அங்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி மும்பையில் தொழிலதிபர் ஒருவருக்கும், வரலட்சுமி சரத்குமாருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் சரத்குமார், ராதிகா, சாயாதேவி உள்ளிட்ட குடும்பத்தினர் திரளாக பங்கேற்றனர். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

மும்பை மாப்பிள்ளை

ஆனால் வரலட்சுமி திருமணம் செய்யும் மாப்பிள்ளை, ஏற்கனவே திருமணமானவர். 15 வயதில் அவருக்கு பெண் இருக்கிறார். இந்நிலையில், 2ம் தாரமாக வரலட்சுமி சரத்குமார் அவரை திருமணம் செய்வதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

--Advertisement--

வரலட்சுமி சரத்குமாருக்கு தற்போது 39 வயதான நிலையில், 45 வயதான தொழிலதிபரை 2ம் தாரமாக அவருக்கு மனைவியாக சம்மதித்து ஏன் என விமர்சனங்கள் எழுந்தது.

இதையும் படியுங்கள்: சாப்பிட மாட்டேன்ன்னு சொல்லிட்டு மாட்டுக்கறியை வெளுத்து கட்டுனா.. VJ மகாலட்சுமி குறித்து ரவீந்தர்..!

அதைப்பற்றி கவலை இல்லை

இந்நிலையில், இது என் வாழ்க்கை. என்னை இதை செய், அதை செய் என்று சொல்லும் யாரும், கடைசி வரை என்னுடன் வரப்போவது இல்லை. யார் என்ன பேசினாலும் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை என்று, மகளிர் தினத்தன்று வரலட்சுமி சரத்குமார், தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார் பேசிய ஒரு வீடியோ கிளிப்பிங் இப்போது வைரலாகி வருகிறது.

அதாவது, பல ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளிவந்த படம் தாரை தப்பட்டை. இது இளையராஜாவின் இசையில் 1000வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் கதாநாயகனாக சசிக்குமார், கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார், வில்லனாக ஆர்கே சுரேஷ் நடித்திருப்பர்.

இதில் ஒரு காட்சியில் வரலட்சுமி சரத்குமாரை, ஏமாற்றி பொய் சொல்லி திருமணம் செய்துக்கொள்வார் ஆர்கே சுரேஷ். அவரை அடித்து துன்புறுத்துவது போல ஒரு காட்சி வரும். அந்த காட்சியில் வரலட்சுமி நெஞ்சில் ஓங்கி ஓங்கி ஆர்கே சுரேஷ் மிதிப்பது போன்று அந்த காட்சி இருக்கும்.

மிதி மிதின்னு மிதிச்சான்

அந்த காட்சியில் நடித்தது குறித்து அந்த வீடியோவில் பேசிய வரலட்சுமி சரத்குமார் கூறியதாவது,

டேய் பார்த்து மிதிடா, ரொம்ப பீல் பண்ணி மிதிச்சிடாதடான்னு சொன்னேன். அவன் கேக்கலை, மிதி மிதின்னு மிதிச்சான். க்ராக் அங்கயே ஒரு சவுண்டு கேட்டுச்சு. நான் எதுவும் சொல்லல. நான் ஏதாவது சொன்னா, கட் சொல்லிடுவாங்க. திரும்ப இந்த சீனை பண்ணனும்.

இதையும் படியுங்கள்: தங்கத்துல லெக்கின்ஸ் பேண்ட்.. ஒரு பக்கத்தை முழுசாக காட்டி சரண்யா துராடி ஹாட் போஸ்..

அதனால், அந்த ஷாட் எல்லாம் முடிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம், பாலா சார் அவரது கழுத்தில் இருந்த கோல்டு செயினை கழட்டி என் கழுத்துல போட்டார். நான் அந்த சீன்ல அழுகலை, அதனால் இந்த மாதிரி எல்லாம் நான் பார்த்தது இல்லேன்னு சொன்னார்.

ஹாஸ்பிடல் வரைக்கும்

சார் ஷாட் முடிஞ்சதா சார்ன்னு கேட்டேன். ஆமா முடிஞ்சது ஏன்னு கேட்டார். பக்கத்துல ஹாஸ்பிடல் வரைக்கும் போயிட்டு வந்துடறேன் சார். இல்லே, ஏதோ கிராக் ஆயிருக்குமுன்னு நினைக்கிறேன் சார்ன்னு சிரிச்சுட்டே சொன்னேன். அங்க போய் எக்ஸ்ரே பண்ணும்போது எலும்பில் விரிசல் இருந்தது தெரிய வந்தது, என்று கூறியிருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

எலும்பே உடஞ்சி போச்சு

தாரை தப்பட்டை படப்பிடிப்பில், ஆர்கே சுரேஷ் நெஞ்சின் மீது ஆக்ரோஷமாக மிதித்ததால் எலும்பே உடஞ்சி போச்சு என்று வரலட்சுமி சரத்குமார் இந்த வீடியோவில் ஓப்பனாக கூறியது வைரலாகி வருகிறது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top