மருத்துவமனையில் இயக்குனர் வம்சி … நிறுத்தப்பட்ட வாரிசு படப்பிடிப்பு… கவலையில் ரசிகர்கள்!

தெலுங்கு பட தயாரிப்பாளர் ஆனால் திகழ்கிறார் தயாரிப்பில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் வாரிசு படத்தை இயக்குபவர் தான் வம்சி. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று முடிந்துள்ள தருவாயில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புகள் அனைத்தும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

 இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல் முதலாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். எந்த படத்தில் பல முக்கிய  நட்சத்திரங்கள் நடித்து வரும் வேலைகள் சுமார் 100 நாட்களை கடந்து இதன் படப்பிடிப்பு சென்று கொண்டிருந்தது.

பீஸ்ட் தோல்விக்குப் பின்னால் இந்த படத்தை மிகவும் ஆவலாக எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்திற்கான ஷூட்டிங் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அறிந்து ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 இதற்குக் காரணம் இந்த படத்தை இயக்கக் கூடிய இயக்குனர் வம்சி உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் இவரை பரிசோதனை பண்ணிய டாக்டர்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு வாரமாவது இவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறியதன் காரணத்தினால் படப்பிடிப்பு திடீர் என்று நிறுத்தப்பட்டுள்ளது.

 இயக்குனர் வம்சி உடல்நிலை தேறி மீண்டு வந்த பின்புதான் படப்பிடிப்புகள் தொடங்கும் என தெரிய வருகிறது. இந்தப் படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தார்கள் தீபாவளியன்று ஒரு பாடலாவது வெளியிடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்த ரசிகர்களுக்கு  இது மிகவும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

எனவே விரைவில் இயக்குனர் வம்சி உடல் நலம் தேறி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு பொங்கலன்று கட்டாயம் ஒரு பாடலாவது வெளிவர வேண்டும் என்று ரசிகர்கள் இறைவனை வேண்டி வருகிறார்கள்.

இதனை அடுத்து வாரிசு படக்குழுவில் உள்ள அனைவரும் டைரக்டர் விரைவில்  உடல் நலம் பெற்று திரும்பி மீண்டும் படப்பிடிப்பு வரவேண்டும் என்று  மனதார வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …