அடுத்ததா… அதிரடியாக களம் இறங்க வந்தாச்சு… நம்ம அண்ணன் விஜய்யின் வாரிசு படத்தோட இசை வெளியீட்டு விழா!

தமிழ் சினிமாவில் நட்சத்திர  அந்தஸ்து பெற்ற நடிகர்கள் ஒருவர் தான் தளபதி விஜய். இவருக்கு பட்டாசு வெடிப்பதை விட மிகவும் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய ரசிகர்கள் பட்டாளம் அதுவும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என வித்தியாசமில்லாமல் உள்ளது.தற்போது தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு  படத்தின் இயக்குனர் வம்சி.இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின்  பிடிப்புக்கள் ஓரளவுக்கு முடிந்துவிட்ட தருவாயில் இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி வரும் என தெரிகிறது.

 வாரிசு படத்தின் படப்பிடிப்பு முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்திலும் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்தது. தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படம் சரியாக ஓடாத காரணத்தால்  இந்த படத்தை எதிர்பார்த்து இவரது ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள்.

மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார்.  இவரை அடுத்து பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, யோகிபாபு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் தீபாவளியில் வெளியாகும் என்று சூசகமாக தெரிவித்திருக்கிறார்.

 மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது .படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 4ஆம் தேதி அல்லது 11ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரபூர்வமான தகவல்கள் வந்திருக்கிறது.

 அடுத்து அந்தப் பாடல்களை கேட்கக்கூடிய ஆர்வத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து வெளிவரும் மிக பிரம்மாண்ட படங்களின் வருகையால் ரசிகர்கள் திணறிப் போவார்கள் என்பது தெரிகிறது.

மேலும் விஜய்யின் பிறந்த நாளன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது அதை எடுத்து இந்த அறிவிப்பு ரசிகர்களை மேலும்  கொண்டாட்டத்தில் ஈடுபட  உதவியாக உள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …