நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் ஆகிய இருவரின் படங்களும் பொங்கல் பண்டிகை அன்று திரைக்கு வர இருக்கிறது. கடைசியாக நடிகர் விஜயின் ஜில்லா மற்றும் நடிகர் அஜீத்தின் வீரம் என இரண்டு திரைப்படங்களும் கடந்த 2014-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று வெளியாகி ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.
அதனைத் தொடர்ந்து தற்போது எட்டு ஆண்டுகள் கழித்து நடிகர் விஜயின் வாரிசு மற்றும் நடிகர் அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன. இந்த படத்திற்கான தியேட்டர் புக் செய்வதிலேயே இரண்டு படங்களுக்கும் கடுமையான போட்டா போட்டி நிலவி வருகிறது.
மேலும் இதில் சில அரசியல் அழுத்தங்களும் சேர்ந்து கொண்டு இந்த பிரச்சனையை பெரும் பூதாகரமாக வெடிக்க செய்து வருகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வழக்கமாக படத்தின் கதை என்ன என்று டிக்கெட் புக்கிங் தலங்களில் ஒன் லைன் ஸ்டோரி வெளியாவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த டிக்கெட் புக்கிங் இணையதளம் ஒன்றில் துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களின் ஒன்லைன் என்ன என்று பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த தகவலை தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம். அந்த தகவலின் படி நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் கதை என்னவென்றால்.. கஷ்டம் என்றால் என்ன என்றே தெரியாமல் வளரும் ஹீரோ.. மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் நடத்திவரும் ஒருவரின் வளர்ப்பு மகனாக இருக்கிறார். இ
டையில் தன்னுடைய தந்தை எதிர்பாராதவிதமாக இறந்துவிடுகிறார். இதனைத் தொடர்ந்து திக்குத் தெரியாமல் இருக்கும் ஹீரோ பல கோடி மதிப்பு இருக்கக்கூடிய தொழில் சாம்ராஜ்யத்தை காப்பாற்ற என்ன செய்கிறார் என்பதுதான் இந்த படத்தின் ஒன் லைன் என்று கூறப்பட்டிருக்கிறது.
மறுபக்கம் நடிகர் அஜித்தின் துணிவு. இந்த படத்தில் கதை என்னவென்றால்.. சென்னையில் இருக்கக்கூடிய வங்கிகளின் மிகப் பெரிய கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றம் மிகப்பெரிய திட்டத்துடன் இருக்கிறார் கதாநாயகன்.
அந்த வங்கிக் கொள்ளையை செய்து முடித்தாரா..? அதற்கு முன்பு.. என்ன காரணத்தினால் அந்த வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் இடுகிறார் என்பது தான் துணிவு படத்தின் ஒன் லைன் ஸ்டோரி என்று அந்த இணையதளத்தின் வாயிலாக நமக்கு தெரியவருகிறது.
இந்த இரண்டு கதைகளுமே தமிழ் சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட கதை தான் என்றாலும் கூட படத்தின் திரைக்கதை எப்படி அமையப்போகிறது என்பதுதான் படத்தின் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் காரணியாக அமையும். படம் வெளியான இரண்டு நாட்களில் எந்த படம் பெஸ்ட் என்று தெரிந்து விடும் அது வரை காத்திருப்போம்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.