ப்ளீஸ்.. காருக்குள்ள உக்காந்துட்டு.. இதை பண்ணாதிங்க.. கையெடுத்து கும்பிடும் பிகில் வர்ஷா பொல்லம்மா..!

பிரபல நடிகை வர்ஷா பொல்லம்மா தமிழில் பிகில் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு காரில் செல்லும் பொழுது இதனை செய்ய வேண்டாம் என்று ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

மழை காலமான தற்பொழுது கார் ஓட்டுபவர்கள் வேகமாக ஒட்டி தண்ணீர், சேர் ஆகியவற்றை நடைபாதையில் நடந்து செல்பவர்கள் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது தெளித்துவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

தயவுசெய்து பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் காருக்குள் பாதுகாப்பாக இருப்பீர்கள்.. உங்கள் மீது மழை துளி கூட போவதில்லை. சாலைகளில் தேங்கியிருக்கும் தண்ணீர் பட போவதில்லை.

ஆனால் சக மனிதர்கள் நண்பர்கள் சாலையில் இருசக்கர வாகனங்களில் வருகிறார்கள்.. நடந்து செல்கிறார்கள்.. அவர்கள் மீது சாலையில் தேங்கி இருக்கும் தண்ணீர் தெறித்து விடாதபடி கவனமாக வாகனத்தை ஓட்ட பழகிக் கொள்ளுங்கள்.

நேற்று டெலிவரி பாய் ஒருவரின் மீது காரில் வந்த ஒரு நபர் ஒட்டுமொத்தமாக சேறை வாரி இழுத்து விட்டு சென்றுவிட்டார். இதனால் மிகவும் சோகம் ஆகி விட்டார். அந்த டெலிவரி பாய் இதனை பார்த்து எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

எனவே தயவுசெய்து சாலையில் நடந்து செல்பவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் நாம் காரில் இருக்கிறோம் என்ற காரணத்திற்காக சாலையில் தேங்கி இருக்கும் தண்ணீர் அவர்கள் மீது படும்படி வேகமாக காரை ஓட்டாதீர்கள்.

தயவு செய்து கவனமாக வாகனத்தை ஓட்டுங்கள். அவர்களும் ஒரு இடத்திற்கு வேலைக்கு செல்வார்கள்.. அல்லது ஏதாவது ஒரு விஷயத்திற்காக வெளியில் சென்று கொண்டிருப்பார்கள்.. அவர்களை இப்படி அவர்கள் மீது சேற்றை வாரி அடித்தால் அவர்களுக்கு மிகவும் கஷ்டமான ஒரு சூழ்நிலை ஏற்படும்.

 

View this post on Instagram

 

A post shared by Varsha Bollamma (@varshabollamma)

எனவே அந்த சூழ்நிலையை அவர்களுக்கு கொடுக்காதீர்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார் நடிகை வர்ஷா பொல்லம்மா.