சுத்திவிட்டு வேடிக்கை காட்டுறதுனா இது தானா…? – வைரலாகும் வர்ஷா பொல்லம்மா வீடியோ..!

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான சதுரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா பார்ப்பதற்கு நடிகை நஸ்ரியா போலவே தோற்றம் அளிப்பதால் இவரை பலரும் குட்டி நஸ்ரியா என்று அழைத்தனர்.

தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கால்பந்தாட்ட வீராங்கனையான இவர் தன்னுடைய குடும்பத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக அதிலிருந்து விலகி இல்லத்தரசியாக வாழ்வை தொடர்ந்து வருகிறார் என்பதை அறிந்த நடிகர் விஜய் அவருடைய குடும்பத்தினருக்கு ஒரு பெண்ணென்றால் இல்லத்தரசியாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

அவளுக்கு என ஆசைகளும் கனவுகளும் இருக்கும். அந்த கனவுக்கு நாம் துணை இருக்க வேண்டும் என்று அவருடைய குடும்ப மற்றும் கணவரிடம் எடுத்துக் கூறி மீண்டும் நடிகை வர்ஷா பொல்லம்மா அவை கால்பந்தாட்டம் போட்டியில் கலந்து கொள்ள வழிவகை செய்து கொடுப்பார்.

தன்னுடைய காட்சிகளை தத்ரூபமாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார் வர்ஷா பொல்லம்மா. சமீபத்தில், தன்னுடைய கண்களை தானம் செய்தார். இவர் மேலும் ரசிகர்களையும் உங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள் உடல் உறுப்பு தானம் என்பது இன்று அத்தியாவசியமான ஒன்று பலரும் தங்களுடைய புதிய வாழ்வை தொடங்க உங்களுடைய உடல் உறுப்புகள் பயன்படும்.

எனவே இன்றைய உடல் உறுப்பு தானம் செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் வர்ஷா பொல்லம்மா. இவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தண்ணீர் பாட்டிலில் இருக்கும் தண்ணீரை சுத்த விட்டு வேடிக்கை காட்டி இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்த வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இதை தான் சுத்த விட்டு.. வேடிக்கை காட்டுவது என்பார்களோ..? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.