துபாய் புர்ஜ் கலிஃபாவில் குடும்பத்தோடு விக்கியின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா… ஆனந்தமான விக்னேஷ் சிவன்!

காதல் தோல்வியால் துவண்டிருந்த நயன்தாராக்கு நம்பிக்கை  தரும் விதமாக அமைந்திருந்த படப்பிடிப்பு தான் நானும் ரவுடி  தான். இந்த படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இவருக்கு  வேகம் அளிக்கக்கூடிய வகையில் நடந்து கொண்டதால் இவர்கள் இடையே காதல் மலர்ந்தது.

 மிக நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்கள் பெற்றோர்கள் சம்மதத்தோடு தற்போது தான் மிகவும் பிரம்மாண்டமான முறையில்  திருமணம்  செய்து கொண்டார்கள் இந்த திருமணத்திற்காக தமிழகத்தில் இருக்கக்கூடிய நடிகைகள் நடிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் இருக்கும் அத்தனை ஜாம்பவான்களும் கலந்து கொண்டார்கள்.

 இதனைத் தொடர்ந்து  இவர்கள் ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஹனிமூன் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்கள் அப்போது எடுத்த புகைப்படங்களை  இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்து ரசிகர்களிடையே நிறைய கமெண்டுகளை பெற்றனர்.

 தற்போது விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக  நடிகை நயன்தாரா அவரது மாமியார் மற்றும் விக்னேஷ் சிவனின் தங்கையை துபாய்க்கு அழைத்துச் சென்று ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

 மேலும் உலகிலேயே மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவுக்கு கீழே தனது கணவனின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார் தன் கணவனோடு இணைந்து எடுத்திருக்கின்ற போட்டோக்களை தற்போது அவர் இணையத்தில் வெளியிட்டு அனைவரையும் பிரமிக்க வைத்திருக்கிறார்.

மனைவியின் பாசத்தை எண்ணி திக்குமுக்காடி இருக்கக்கூடிய கணவர் விக்னேஷ் சிவன்  பரிசாக பிறந்தநாள் பரிசளித்து இருக்கக்கூடிய தன் மனைவியை எண்ணி மகிழ்ந்துள்ளார்.

 இதைப்பார்த்த ரசிகர்கள் இப்போதுதான் ஸ்பெயின் டூர் முடிந்தது. அதற்குள் இப்போது பிறந்தநாளை சாக்காட்டில் துபாயில் இன்னொரு டூரா…என்று கேட்டிருக்கிறார்கள்.

இந்த டூர் முடிந்ததும் ஏகே 61 படம் முடிந்த உடனே இதே ஆண்டு ஏகே 62 படத்திற்கான வேலையை விக்னேஷ் சிவன் துவங்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளது இவரை மிகவும் பிடித்து விட்டதால் அடுத்த கட்ட வேலையை ஆரம்பிப்பார் போல தெரிகிறது.

வலிமை படத்தில் விக்னேஷ் சிவன் எழுதியிருந்த அம்மா பாடல் அதை எடுத்து நாங்க வேற மாதிரி போன்ற பாடல்களால் இம்ப்ரஸ் ஆகி இருக்கக் கூடிய அஜித் எந்த படத்திலும் அவரை ஒரு பாடல் எழுதச் சொன்னார் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறும் வண்ணம் தான் உள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …