“விடுதலை” படம் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார் வெற்றிமாறன்?

ஆடு களம் படத்தில் தேசிய விருதை தட்டிச் சென்ற வெற்றிமாறன் மிகச் சிறந்த இயக்குனர். கிராமத்தில் நிகழக்கூடிய சம்பவங்களை மிக நேர்த்தியான முறையில் தனது திரைப்படத்தில் பதிவு செய்வதில் வல்லவர். இவர் கடந்த 15 ஆண்டுகளில் ஆடுகளம் பொல்லாதவன் அசுரன் வடசென்னை  மற்றும் விசாரணை ஆகிய ஐந்து படங்கள் மட்டுமே இயக்கிய உள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும் .

 ஆடுகளம் படத்தில் தனுஷ் நடித்திருந்தால் அதை இயக்கிய வெற்றிமாறன் சிறந்த இயக்குனராகவும் மேலும் பல விருதுகளை இந்த படம் அள்ளிச் சென்றது. ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு புதுவித கருத்தை மக்களுக்கு வலியுறுத்தி சொல்வதில் இவர் வல்லவர்.

 

தற்போது வெற்றி மாறன் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திலும் கண்டிப்பாக ஏதாவது ஒரு கிராம பதிவினை பதிவு செய்வார். இப்படத்தில் பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

குறிப்பாக சூரி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்க இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். நிச்சயமாக இந்தப் படம் ஒரு கிராமத்து விருந்தாக நமக்கு அமையும் என்பதில் சந்தேகமில்லை.

---- Advertisement ----

 சமீபத்தில்தான் இவர் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளி வரும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

 இவரின் பிறந்தநாளை அனைத்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் இவருடன் பணியாற்றும் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு அவரைப் பற்றிய சில முக்கிய தகவல்களையும் பதிவு செய்திருந்தார்கள் குறிப்பாக விடுதலைப் படத்தில் நாயகனாக நடிக்கும் சூரி இவரைப் பற்றி கூறுகையில் தமிழ் மொழியில் தரமான சினிமாவை கொண்டு வந்தவர், சிறந்த உழைப்பாளி, நல்ல விவசாயி, மக்களை மதிப்பவர் புகழாரம் சூட்டினார். 

மேலும் இந்த படத்தில் மேலும் ஒரு கதாநாயகன் இருக்கிறார் அவர்தான் விஜயசேதுபதி இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க, படத்தை வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்  அவர்கள் இவர்கள் அனைவருமே பிறந்தநாள் வாழ்த்துக்கு வெற்றிமாறனுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தது  அவரை நெகிழ வைத்துள்ளது மேலும் படக்குழுவில் வேலை செய்யும் அனைவரும் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

---- Advertisement ----