நடிகை வித்யா பிரதீப் ( Vidya Pradeep ) சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஒருபோதும் வெள்ளித்திரையில் மிளிர முடியாது என்பதை ஒரு சிலர் மாற்றி காண்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் என ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் சினிமாவில் வெற்றி கொடி நாட்டியுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த வித்யா பிரதீப் பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். மருத்துவ துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா, ஆரம்பத்தில் இருந்தே மாடலிங் துறையிலும் சாதித்து வருகிறார்.
அதன் பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கிய வித்யா, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான “சைவம்” படத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்தார்.
அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் படத்திலும் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
குடும்ப தலைவியாக செம்ம கெத்தாக நடித்து வரும் வித்யா, மாடலிங் துறையில் பிசியாக வலம் வந்த போது கொடுத்த ஹாட் கிளிக்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.
குட்டை டவுசர், முண்டா பனியனை தூக்கி கட்டி.. படு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள வித்யா பிரதீப்பின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.