சீரியலில் குடும்ப பாங்கினியாக தோன்றும் அபியும் நானும் நடிகையா இது.. ? வாயடைத்து போன ரசிகர்கள்..!

சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் அபியும் நானும். இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வித்தியா வினு மோகன். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கோட்டயம்.

இவர் ஒரு மலையாள நடிகை. அப்பா வங்கி அதிகாரி. சிறு வயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்த இவர், முதலில் விளம்பரப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது முதன் முதலில் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

மலையாளத்தில் முதன்முதலாக சீதா கல்யாணம் படத்தில் நடித்தார். அதன் பிறகு வரிசையாக ஏராளமான படங்கள் நடித்தார். “பரயன் மரன்னத்து,” “நீலாம்பரி,” “செரிய கள்ளனும் வல்லிய போலீசும்,” “மகாராஜா டாக்கீஸ்,” “எம்.எல்.ஏ. மணி: பத்தாம் கிளாசும் குஸ்தியும்,” “ஈ திறக்கினிடையில்,” “ஸ்வப்ன மல்லிகா,” “பெல்லரி ராஜா,” “ரெட் அலர்ட்,” “கால் சிலம்பு” போன்ற மலையாள படங்களில் நடித்தார்.

மக்களிடம் அதிகம் வரவேற்பை பெறுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான். பலபேர் சீரியல்களில் நடித்து விட்டு சினிமாக்களில் நடித்து வந்துள்ளனர். சீரியல் நடிகைகள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளத்தில் அதிக கவனம் பெற்று வருகிறார்கள்.

அந்த வரிசையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அபியும் நானும் சீரியலில் வரும் வித்யா வினு மோகன் என்பவரும் ஒருவர்.அபியும் நானும் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் வித்யா வினு, ரசிகர்களை அதிகம் சேர்த்து வைத்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களை இவர் பக்கம் இழுத்து வருகிறது.அவ்வபோது போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிடும் வித்யா வினு தற்போது நீச்சல் குளத்தில் எடுத்த போட்டோவையும், குட்டி ஆடை அணிந்த புகைப்படங்களையும் பதிவேற்றி வருகிறார்.

இதை பார்த்த ரசிகர்கள், அபியும் நானும் சீரியலில் புடவையில் அடக்கமாக வந்த வித்யாவா இது என வாயை பிளக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …