இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக அதீத மன அழுத்தத்தில் இருந்த விஜய் ஆண்டனியின் மகள் லாரா தூக்கிட நிலையில் சுடலமாக மீட்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் இருக்கிறது.
மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவுக்கு சென்று இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், தேனாம்பேட்டை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த லாரா சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் அதிகாலை வேலையில் தூக்கிட்டு நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.
இது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மற்றும் விஜய் ஆண்டனி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கின்றது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.