தன்னுடைய மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், பள்ளி மாணவர்கள் எதனால் தவறான முடிவு எடுக்கிறார்கள் என்று நடிகர் விஜய் ஆண்டனி பேசியுள்ள வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனியிடம் சமீப காலமாக இந்த தற்கொலை எண்ணங்கள் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இது குறித்து உங்களுடைய பதில் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.
தற்கொலை எண்ணங்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் தான் இதற்கு பலியாகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அவருடைய பெற்றோர்கள் தான்.
அவர்களை எப்போதும் படி படி என்று சொல்லிக் கொண்டே இருப்பது. அவர்களுக்கு மிகப்பெரிய மன அழுத்தமாக இருக்கும். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் படி படி என்றால் எப்படி..? அவர்கள் படிப்பை தவிர வேறு எந்த விஷயத்தையும் உணரவோ அல்லது அனுபவிக்கவோ நாம் அனுமதிப்பது கிடையாது.
பெற்றோர்கள் இதனை மாற்றிக் கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்களை குழந்தைகளை சுதந்திரமாக வளர விட வேண்டும் என்றெல்லாம் பேசி இருக்கிறார் விஜய் ஆண்டனி.
இந்நிலையில், அவருடைய மகள் தற்போது தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீபத்தில் தான் நடிகர் விஜய் ஆண்டனி-தான் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்துவதில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணம் என்று தகவல்கள் பரவின. இதனை மறுத்தது மட்டுமில்லாமல் அந்த தகவலை வெளியிட்ட நபர் மீது மான நஷ்ட வழக்கு தொடுக்க இருப்பதாக விஜய் ஆண்டனி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
#VijayAntony about suicidal thoughtspic.twitter.com/sqQGEx70h4
— Cine Promoters (@cinepromoters) September 19, 2023
இதனை தொடர்ந்து தற்போது இவருடைய மகள் திடீரென தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.