விஜய் ஆண்டனி மகள் எழுதிய இறுதி கடிதம்..! – கடைசி வார்த்தையை பார்த்து அதிர்ந்த போலீசார்…!

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் இறப்பு குறித்து முரண்பட்ட தகவல்கள் விசாரணையில் கிடைத்து வருகின்றன.

ஒரு பக்கம் விஜய் ஆண்டனியின் மகள் மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் மறுபக்கம் அவருடைய பள்ளி மாணவிகள் அவருடன் படித்த தொகுப்பு தோழிகள் மீரா மிகவும் கலகலப்பான பெண் அவரை சோகமாக இருந்து நாங்கள் பார்த்ததே இல்லை என்று கூறி இருக்கின்றனர்.

அதே நேரம் பள்ளி ஆசிரியர்களிடம் நடத்திய விசாரணையின் போது மீராவிற்கு பள்ளியில் எதுவும் பிரச்சனை கிடையாது. சகஜமாகத்தான் இருந்தார். அவருக்கு மன அழுத்தம் எதுவும் இருந்ததாக தெரியவில்லை என கூறி இருக்கின்றனர்.

மட்டுமில்லாமல் மீரா கலகலப்பான பெண், தான் செல்லமாக வளர்க்கும் நாயுடன் வாக்கிங் செல்வதை பழக்கமாகக் கொண்டிருந்தார் என்று அக்கம் பக்கத்தினர் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்நிலையில், மீராவின் அறையில் இருந்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டிருகிறது என்று போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

அந்த கடிதத்தில், தனது குடும்பம் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை மிஸ் செய்வதாக எழுதப்பட்டுள்ளது எனவும் கடிதத்தின் இறுதியில் Good Bye என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

எனவே தற்கொலைக்கு முன் இந்த கடிதத்தை எழுதி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு இருக்கின்றனர் போலீசார்.

எனினும் இந்த கடிதத்தை எழுதியது விஜய் ஆண்டனியின் மகள் தானா..? எப்போது எழுதப்பட்டது..? என்பதை உறுதி செய்ய அதனை தடயவியல் நிபுணர்கள் ஆராய்ச்சிக்காக கைப்பற்றி இருக்கின்றனர் என்று தெரிய வருகிறது.

தொடர்ந்து இவருடைய மரணத்தில் முரணான தகவல்கள் வெளியாகி கொண்டிருப்பது இந்த மேலும் பரபரப்பை கிளம்பி இருக்கிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ஒரு கையில் சாமி..! மறு கையில் ஈ.வெ.இராமசாமி..! வணங்கான் போஸ்டரால் வெடித்த சர்ச்சை..!

நடிகர் அருண் விஜய் இயக்குனர் பாலா கூட்டணியில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. முதலில் …