Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“போதையில் மிருணாளினி ரவி..” ஏசு கிறுஸ்துவை இழுத்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனி..

Tamil Cinema News

“போதையில் மிருணாளினி ரவி..” ஏசு கிறிஸ்துவை இழுத்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனி..

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. நான், பிச்சைக்காரன், திமிரு புடிச்சவன், இந்தியா பாகிஸ்தான், சலீம், கொலைகாரன் என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். பிச்சைக்காரன் 2 படம் சரியாக போகவில்லை. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ரத்தம் படமும் பிளாப் ஆனது.

விஜய் ஆண்டனி

இந்நிலையில், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ என்ற படத்தில், விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் ஸம்மர் ஸ்பெஷலாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு வருகிறது. இது ஒரு ஜாலியான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுபானம் ஊற்றிக்கொடுப்பது

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதில் முதலிரவு அறையில், இளம் மனைவி மதுபாட்டிலில் இருந்து டம்ளரில் மதுபானம் ஊற்றிக்கொடுப்பது போலவும், அருகில் புது மாப்பிள்ளையாக விஜய் ஆண்டனி அமர்ந்துக்கொண்டு அதை பார்ப்பது போலவும் இருந்த அந்த போஸ்டர் பயங்கர வைரலானது.

இதில் வெத்தல வெத்தல பெரிய வெத்தல என்ற டபுள் மீனிங்கும் பாடலும் வெளியாகி டிரண்டிங் ஆனது. பெண்களுக்கு எதிரான கொச்சையான கருத்துகளை கொண்டதாக இந்த பாடல் குறித்தும் பலவிதமான சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் எழுந்து வருகினறன.

--Advertisement--

மிருணாளினி ரவி

ரோமியோ படம், விஜய் ஆண்டனியின் பழைய படங்களில் இருந்து மாறுபட்ட படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தில் மிருளாளிணி ரவி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் கோப்ரா, எம்ஜிஆர் மகன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்- போக்கிரி படத்தில் வில்லியாக நடிச்ச பிருந்தாவா இது..? அடையாளமே தெரியலையே.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

சமீபத்தில் ரோமியோ படத்தின் பிரமோவுக்கான பிரஸ்மீட் நடந்தது. இதில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அப்போது கேள்வி கேட்ட நிருபர்கள், முதலிரவில் ஹீரோயின் சரக்கடிப்பதை போல காட்டலாமா, அதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பினர்.

ஏன் குடிச்சீங்க

அப்போது அவர், அய்யோ நான் சரக்கு அடிக்கலீங்க, இவங்கதான் என மிருணாளினி ரவியை காட்டியவர், ஏன் குடிச்சீங்க எனவும் கிண்டலாக கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர் ஏதோ மழுப்பலான ஒரு பதிலை சொல்ல, அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி, ஆண்கள் மட்டும்தான் குடிக்க வேண்டுமா, மது குடிப்பது பொதுவானது. ஆண்கள் ஒரு விஷயத்தை செய்தால், அதை பெண்களும் தாராளமாக செய்யலாம்.

இதையும் படியுங்கள்- அம்பிகா வாழ்வில் சோகங்கள்.. வடிவேலு கொடுத்த வாய்ப்பு.. அந்த நோய் இருக்குன்னு சொல்லி..

ஜீசஸ் குடிக்கலையா

பெண்கள் குடிக்க கூடாது என்றெல்லாம் பேசக்கூடாது என்று கூறிய விஜய் ஆண்டனி, ஜீசஸ் குடிக்கலையா, அந்த காலத்தில் திராட்சை ரசம், சோம பானம் போன்ற மதுபான வகைகள் இருந்தது தானே, என்றும் பேசியுள்ளார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

இது கிறிஸ்துவ அமைப்புகள் மத்தியில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது படம் குறித்த பிரமோவுக்கு படம் குறித்து பேசாமல், ஏசு கிறிஸ்து குறித்து இழிவுபடுத்தும் விதமாக எதற்காக பேச வேண்டும் என, கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

படத்தில் போதையாக மிருணாளினி ரவி நடித்தது குறித்த கேள்விக்கு, ஏசு கிறிஸ்துவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனிக்கு ‘இதெல்லாம் தேவையா’ என அவரது ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top