ஒரு வருசத்துல எத்தனை கஷ்டம்.. ஷூட்டிங் விபத்து முதல் மகள் மரணம் வரை..! – ரசிகர்கள் சோகம்..!

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மரணம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

தன்னுடைய இசையின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் விஜய் ஆண்டனி. அதன் மூலம் திரைப்படங்களில் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்தார்.

இவருடைய படங்கள் தனித்துவமான கதை, திரைக்கதை மற்றும் தலைப்புகளுடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பு பெற்றது.

கடந்த ஜனவரி மாதம் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு விஜய் ஆண்டனியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த விஜய் ஆண்டனி. சமீபத்தில் பல்வேறு சர்ச்சைக்கினார்.

குறிப்பாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் நடத்திய மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி நடந்த குளறுபடிகளுக்கு காரண கர்த்தாவாக இருந்தது விஜய் ஆண்டனி தான் என்று சமீபத்தில் மார்ஸ் தமிழ்நாடு என்ற யூ-ட்யூப் சேனல் ஒன்றில் தகவல்கள் வெளியாகின.

ஆனால் அது குறித்து ஆதாரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் கடுப்பான விஜய் ஆண்டனி இது தவறான தகவல் கண்டிப்பாக அந்த தகவலை பரப்பி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் மான நஷ்ட வழக்கு தொடர் இருக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

நஷ்ட ஈடாக கிடைக்கும் பணத்தை நலிவடைந்த இசையமைப்பாளர்களுக்கு நன்கொடையாக கொடுக்க இருக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்களே கழிந்த நிலையில் தற்போது தன்னுடைய மகளை இழந்து இருக்கிறார் விஜய் ஆண்டனி.

நேற்று (செப்.18) மாலை முதல் சோகமாக இருந்த அவருடைய மகள் லாரா இன்று (செப்.19) அதிகாலை 3 மணி அளவில் தன்னுடைய அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

கடந்த ஒரே வருடத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு எவ்வளவு பிரச்சனைகள் எத்தனை கஷ்டங்கள் என்று ரசிகர்கள் பலரும் தங்களுடைய சோகங்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த இணையவாசிகளும் விஜய் ஆண்டனியின் ரசிகர்களும் சோக கடலில் மூழ்கி இருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும்.

அதே நேரத்தில் நடிகர் விஜய் ஆண்டனி மன தைரியத்துடன் இருக்க வேண்டும் எத்தனை பிரச்சனை வந்தாலும் ரசிகர்கள் உங்களுடன் இருக்கிறோம் நீங்கள் உடைந்து விடக்கூடாது என்று அவருக்கு ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

#KeralaBoycottLEO – கேரளாவில் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! – Trend செய்யும் ரசிகர்கள்..! – இது தான் காரணம்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை …