விஜய் ஆண்டனியின் புதிய திரைப்படம்..! – எக்குதப்பாக எகிறிய எதிர்பார்ப்பு..!

விஜய் ஆண்டனி ஆரம்பகட்டத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி பல படங்களுக்கு இசை அமைத்த பின்னர் தன்னை ஓர் கதாநாயகனாக அறிமுகப்படுத்திக் கொண்டார் இவர் பிச்சைக்காரன் படத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்து மிக நல்ல பெயரை வாங்கி இருப்பார் இவர் படம் தனித்துவம் வாய்ந்த கதையம்சம் கொண்டிருக்கும்.

தன் கைவசம் ஏகப்பட்ட படங்களை கையில் வைத்திருக்கக்கூடிய விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 வள்ளி மயில் போன்ற படங்களில் மிக  பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வள்ளி மயில் படப்பிடிப்பு இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது என்று கூறவேண்டும். நடிகர் சூர்யாவிற்கு அடுத்தபடியாக முருகன் கெட்டப்பில் காட்சியளிக்கிறார்  விஜய் ஆண்டனி.நாடகம் போல் உருவாகி வரும் இந்தப் படத்தை தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள்.

மேலும் இந்தப் படத்தில் தெரு கூத்து நாயகனாக அறிமுகமாகி தனது நடிப்பை மிக நல்ல முறையில் வெளிப்படுத்தி இருப்பதால் அவரின் வித்தியாசமான பாடங்களை  தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வேகமாக  பார்த்து வருகிறார்கள்

 இந்த படத்தை வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன்.இவர் நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டியநாடு, ஜீவா போன்ற படங்களை இயக்கிய சுசீந்திரன் தான்  விஜய் ஆண்டனியோடு கைகோர்த்து இந்த படத்தை  இயக்கி வருகிறார்.

இந்த படத்துக்கு கதாநாயகியாக ஜதி ரத்னலு படத்தில் ஹீரோயினாக நடித்த ஃபரியா அப்துல்லா இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  முதல் முறையாக விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தில் இணைந்து அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. மிக விரைவில் நீங்கள் வெள்ளித்திரையில் வள்ளி மயிலை காணலாம். இந்த படம் 1980களில் நடந்த கதையை மையப்படுத்தி படமாக்கி உள்ளார்கள்.

விறுவிறுப்பான முறையில் படம் பிடிக்கப்படும் இந்த படமானது விரைவில் திரைக்கு வர கூடிய வித்தியாசமான படங்களில் முதலிடத்தை பிடிக்கும் என்று கூறலாம்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …