பீஸ்ட்டா…? இல்ல, வேஸ்டா..? – இணையத்தில் கசிந்த கதை..! – ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்..!

நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ லிரிக் வீடியோ வெளியானது.

அதன் ப்ரோமோவில் இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகரும், அரபிக் குத்து பாடலாசிரியரான சிவகார்த்திகேயனும் இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் ஃபோனில் பேசியிருந்தார் விஜய்.

இதையும் படிங்க : “பீஸ்ட்” – இணையத்தில் லீக் ஆன காட்சிகள்..! – படக்குழுவினர் ரசிகர்கள் அதிர்ச்சி..!

இது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. பின்னர் பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் வெளியானது. விஜய் பாடியிருந்த இந்தப் பாடல் இணையத்தில் படு வைரலானது.

விஜயின் பெயர்..

இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் விஜய் ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் பெயர் வீர ராகவன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் போஸ்டர்களை வைத்து பார்க்கும் போது காமெடி கலந்த ட்ரெசர் ஹன்ட் ஜானரில் படம் உருவாகியிருக்க வாய்ப்பு உள்ளது.

பீஸ்ட்டா…? இல்ல, வேஸ்டா..?

இயக்குனர் நெல்சன், இயக்கிய கோலமாவு கோகிலா பவுடர் கடத்தல்.. டாக்டர் படம் மனித கடத்தல்.. இவ்வளவு ஏன் நடிகர் சிம்பு நடிப்பில் நெல்சன் இயக்குவதாக இருந்து ட்ராப் ஆன வேட்டைமன்னன் திரைப்படமும் கடத்தலை மையமாக கொண்டு புனையப்பட்ட கதைதான்.

இதனால், பீஸ்ட் படத்திலும் எதையாவது கடத்தும் கும்பலை ஹீரோ துரத்தி பிடிப்பது தான் கதையாக இருக்க வாய்ப்புள்ளது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. படம் இன்னும் பத்து நாட்களில் நம் கண்களுக்கு வந்துவிடும்.. பார்ப்போம் பீஸ்ட்.. பீஸ்டா..? இல்லை, வேஸ்டா..? என்பதை.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு முக்கிய இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கும் சரண்யா …