பெத்தவங்களோடும் இல்ல.. பொண்டாட்டி, புள்ளைங்களோடும் இல்ல.. நடிகர் விஜய்-யின் மோசமான நிலை..!

நடிகர் விஜய் குறித்து எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வரக்கூடிய செய்திகள் வியப்பை ஏற்படுத்திருக்கின்றன.

ஒரு பக்கம், இதெல்லாம் வதந்தியான தகவல்… நடிகர் விஜயின் பெயரை கெடுப்பதற்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள்.. என பேச்சுக்கள் இருந்தாலும்… நெருப்பில்லாமல் புகையுமா..? என்ற கேள்வியும் பொதுவான ரசிகர்கள் மத்தியில் எழுப்பப்படுகிறது.

முன்னதாக நடிகை கீர்த்தி சுரேஷுடன் நடிகர் விஜய் காதலில் இருக்கிறார் என்றும் நடிகர் கீர்த்தி சுரேஷ் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் விஜய் என்றெல்லாம் கதைகள் எழுதப்பட்டது.

இதற்கு ஆதாரமாக நடிகை கீர்த்தி சுரேஷின் கார் நடிகர் விஜயின் நண்பரான நடிகர் சஞ்சய் வீட்டில் நிறைய நாட்கள் பார்க்  செய்யப்பட்டிருக்கிறது.

நடிகர் விஜய் வீட்டில் காரை பார்க் செய்தால் விவகாரம் ஆகிவிடும் என்பதால் விஜய்யின் நண்பர் வீட்டில் காரை பார்க் செய்துவிட்டு வேறு கார் மூலம் விஜயின் வீட்டுக்கு செல்கிறார் கீர்த்தி சுரேஷ் என்று வீடியோ ஆதாரங்களுடன் செய்திகள் வெளியானது.

இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மட்டுமில்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா என்ற புதிய திரைப்படத்தின் முழு தயாரிப்பு செலவையும் நடிகர் விஜய் மறைமுகமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.

மேலும், நடிகர் விஜய் தன்னுடைய வீட்டில் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார் என்றும் பெற்றோர்களுடனும் இல்லாமல்.. தன்னுடைய மனைவி குழந்தைகளுடனும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.. என்ற தகவல் கடந்த சில வாரங்களாக இணைய பக்கங்களில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு நடிகர் விஜய் என்ன பதில் கூற போகிறார்..? என்று ரசிகர்கள் பலரும் வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

சமீபத்திய பட விழாக்கள், நிகழ்சிகள் என எதிலும் விஜய் அவருடைய மனைவி சங்கீதா கலந்து கொள்ளவில்லை. நடிகர் விஜயின் படம் நிகழ்ச்சிகள் கலந்து சில வருடங்களுக்கு முன்பே தன்னுடைய தந்தை மற்றும் தாய் ஆகியவர்களை விட்டுவிட்டு தனி குடித்தனம் வந்துவிட்டார் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வப்போது தாய் தந்தையரை சந்திக்கும் நடிகர் விஜய் சமீபத்தில் இருதய சிகிச்சை செய்து கொண்டனர் தன்னுடைய தந்தையை சந்தித்து நலம் விசாரித்தார். மட்டுமில்லாமல் எப்போதும் இல்லாத அளவுக்கு லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் தன் நிலை மறந்து பேசி இருந்தார் என்று பலராலும் பொதுவாக விமர்சிக்கப்பட்டது.

நடிகர் விஜய் எப்போதுமே வார்த்தைகளை மிகவும் ஆராய்ந்து பிரயோகப்படுத்தக்கூடிய ஒரு நபர். ஆனால் லியோ திரைப்பட விழாவில் அவர் பேசிய விஷயங்கள் அவருடைய மதிப்பை குறைக்கும் விதமாகவே அமைந்தன.

குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் பேசிய காக்கா கழுகு கதையை இந்த மேடையில் ஊமைகுத்து குத்திக் காட்டும் வகையில் விஜய் பேசியிருந்தது அவருடைய ரசிகர்களால் சிலராலும் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது.

அவர் பேசியது மகிழ்ச்சியாக இருந்தாலும் சந்தோஷப்படும் படியாக இருந்தாலும் அவருடைய எதிர்காலத்திற்கு இப்படியான பேச்சுக்கள் எந்த விதத்திலும் துணை நிற்க போவதில்லை. என்பதுதான் பலரது குரலாக இருந்தது.

இந்நிலையில், நடிகர் விஜய் தனியாக வசித்து வருகிறார். தன்னுடைய குழந்தைகளுடனும் இல்லை, மனைவியுடனும் இல்லை என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு என்ன காரணம்..? நிஜமாகவே தகவல் உண்மைதானே…? என்றெல்லாம் குழப்பத்தில் ஆள்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

இதற்கு என்ன விடை கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …