எல்லா அப்பாக்களை போலத்தான் நானும்… மகன் சரியாக செய்திருந்தால் பாராட்ட மாட்டேன் – விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் !

 

இன்று நம் முன் தளபதியாக தலை நிமிர்ந்து நிற்கின்ற நடிகர் விஜய்யை அவர் தந்தை தான் ஆரம்பக்கட்டத்தில் சினிமாவில் அறிமுகப் படுத்தினார். அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவிய போதிலும் விடாமுயற்சியோடு தன் மகனை நண்பர் விஜயகாந்த் படத்தில் நடிக்க வைத்து அதை இயக்கி மக்கள் முன் தளபதியை  கொண்டு சேர்த்த மிகப்பெரிய பெருமை அவரது அப்பாவை தான் சாரும்.

விஜய் அப்பா சிறந்த டைரக்டர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த நடிகரும் கூட.  மேலும் இவர் நடிகர் ஜெய் நடித்த கேப்பமாரி திரைப்படத்தை தொடர்ந்து நான் கடவுள் இல்லை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இதில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்.

அத்தோடு நிற்காமல் ஒரு யூடியூப் சேனல் ஐயும் இவர் இயக்கி இவர் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பதிவிட்டு வருகிறார். இப்போது இவருக்கும் இவர் மகனுக்கும் இடையே நிறைய மனக்கசப்புகள் உள்ள நிலையில் இவரது 80வது பிறந்த நாளை மகன் இல்லாமல் தனித்து கொண்டாடியது அனைவரும் அறிந்ததே.

இதனை தொடர்ந்து பலவிதமான கருத்துக்களும், விமர்சனங்களும் எழுந்தது. எனினும் இருவரும் அது சம்பந்தமான எந்த விதமான தகவல்களையும் இது வரை பதிவு செய்யவில்லை.

இந்த இடைவெளி ஏற்பட்டதற்கு காரணம் அவரது ரசிகர் மன்றத்தை அரசியல் நிகழ்வுகள் சார்ந்த கட்சியாக மாற்ற நினைத்தால் தான் இப்பிரிவு ஏற்பட்டுள்ளது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.

இவர் தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் விஜய் எவ்வளவு நல்லது செய்தாலும் அதை தான் பாராட்ட மாட்டார், என்றும் தவறு செய்தால் மட்டுமே அதை சுட்டிக் காட்டுவேன் என கூறியிருக்கிறார். மேலும் தனது மகன் 65 படங்கள் நடித்துள்ளார். அந்த 65 படங்களில் வெறும் மூன்று படங்களில் தான் மிக நன்றாக நடித்துள்ளார் என்று நான் சொல்லுவேன்.

இதனாலேயே இருவருக்கும் இடையே கருத்துவேற்றுமை ஏற்படும். என்னோடு அவன் பேச மறுத்து அவன் அம்மாவிடம்  போய் ஒட்டிக் கொள்வான் என்று  வெளிப்படையாக கூறி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …