விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் ஏன் விஜயுடன் தொடர்ந்து நடிக்கவில்லை தெரியுமா..?

 தமிழ் திரைப்படத்தை அனைவராலும் அன்போடு தளபதி என்று அழைக்கப்படுகின்ற தளபதி விஜய் அனைவரிமும்  அன்பாக பழகக் கூடிய தன்மை மிக்கவர். பீஸ்ட் படத்திற்கு பின்னால் வாரிசு படத்தில் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இவரின் ரசிகர்கள் பீஸ்ட் தோல்வியைத் தொடர்ந்து இந்த  வாரிசு படத்தை மாபெரும் வெற்றிப்படமாக தருவார் என்ற நம்பிக்கையில்  காத்திருக்கிறார்கள்.

 இதனை அடுத்து இவரது நெருங்கிய நண்பரான சஞ்சீவ் இவரைப் பற்றி கூறிய விஷயங்கள் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 தளபதி விஜய் எப்போதும் சினிமா இண்டஸ்ட்ரியில் புதிதாக ஒரு நடிகர் உள்ளே வந்தாலும் அவரையும் தனக்கு போட்டியாக நினைக்க கூடிய தன்மை கொண்டவர். கடுமையாக உழைப்பவர் என்று கூறியிருக்கிறார்.

 எல்லாம் நமக்குத் தெரியும் என்று நினைக்காமல் புதிதாக வரும் அவரையும் கம்ப்யூட்டராக நினைத்து நாம் உழைத்தால் மட்டும் தான் சினிமா இண்டஸ்ட்ரியில் நிலைத்து நிற்க முடியும் என்ற சிந்தனை உடையவர் எப்போதும் படபடப்பாக தனது படம் ரிலீஸ் ஆகும்போது காணப்படுவார்.

 அரிசியில் ஜில்லா படம் வெளிவரும்போது ஜில்லா ஜில்லா என்ற பாடல்களை தியேட்டர்களை கேட்ட பின்னர்தான் இவரது டென்ஷன் குறைந்த தான். நண்பர்கள் அனைவரையும் லயோலா கல்லூரிக்கு பக்கம் இருக்கும் திருமண மண்டபத்தில் எப்போதும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்.

 மேலும் தனது நண்பர்கள் அவர்கள் வீட்டுக்குச் சென்று விட்டால் தனது அம்மாவிடம் சொல்லி எத்தனை வகை நான்வெஜ் உணவுகள் உள்ளதோ அத்தனை வகையும் செய்து எல்லோரும் ஓன்றாக சேர்ந்து அமர்ந்து உண்ணக்கூடிய பழக்கம் கொண்டவர். அந்த வகையில் அதிகமான அசைவ உணவுகளை உண்டவன் என்ற பெருமை சஞ்சீவ்வை சாரும் என கலகலப்பாக கூறியிருக்கிறார்.

 எல்லாவற்றிலும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வோம் ஆனால் அவனுக்கு இவன் சிபாரிசு செய்வது இவனுக்கு அவன் சிபாரிசு செய்வதை எல்லாம் எங்களிடையே கிடையாது. எங்களது நட்பு இதுவரை இன்றும் தொடர்ந்து வருகிறது இல்லை என்றால் என்றோ அது முடிவுக்கு வந்திருக்கும். எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதுதான் சிறந்த நட்பு என்று நட்புக்கு இலக்கணமாக அவர் பேசினார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …