தளபதி விஜய் படம் வாரிசு போலவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் ஜெய்லர் … இணையத்தில் கசிவு!

சமீபத்தில் பிரபல பிரபலங்களின் படங்கள் பல இணையத்தில் கசிவது வழக்கமாக ஒன்றாகிவிட்டது. தளபதி விஜய் நடித்த வாரிசு படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளிவந்து படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 அந்த வரிசையில் தற்போது சூப்பர் ஸ்டார் நடித்து வரும் மிகச்சிறப்பான படமான ஜெயிலர் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளிவந்து அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளது. இதையடுத்து படக்குழுவினர் என்ன செய்வது என்று அறியாமல் இது எப்படி நடந்தது என்று குழம்பி இருக்கிறார்கள்.

ஜெயிலர் படப்பிடிப்பது சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் எடுக்கப்பட்டது. அதன் பின் எண்ணூரில் நடத்தது. அப்போது தான் ரஜினிகாந்த் நடித்த காட்சியை யாரோ புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளி உள்ளார்கள்.

 தற்போது லீக்கான அந்த வீடியோவில் ரஜினிகாந்த் நாற்காலியில் அமர்ந்து இருப்பது போல உள்ள காட்சிகள் மற்றும் அவர் மற்ற நடிகர்களோடு பேசி இருக்கக்கூடிய காட்சிகள் அனைத்தும் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவானது தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. இதை அனைவரும் பார்த்து வருகிறார்கள்.

மேலும் வாரிசு பட காட்சிகளில் ராஷ்மிகா மற்றும் விஜய் இணைந்து ஆடிய நடனக் காட்சிகள் வெளியான பின்பு   அந்தப் படக் குழு செல்போன்கள் எதையும் படப்பிடிப்புக்கு கொண்டு வரக்கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளை போட்டு படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அத்தோடு படப்பிடிப்புக்கு வருபவர்கள் அனைவரும் கண்காணிக்கவும் படுகிறார்கள். இதேபோல் இனி  செயல்பட்டால் தான் இது போன்ற இணைய கசிவை  தடுக்க முடியுமோ என்னமோ தெரியவில்லை.

 எம்ஜிஆர் பாடலில் வரும் பாடல் வரிகளைப் போல திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதற்கு ஏற்ப  திருட்டுத்தனமாக படம்பிடித்து அதை வெளியீடும் நபர்கள் இதனை தவறு என உணர்ந்து நடந்தால் இதுபோன்ற தவறுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்காது.

மேலும் இந்த  ஜெய்லர்  வீடியோவை  திருட்டு தனமாக எடுத்து வெளியிட்ட நபர் யார் என்பதை கண்டறிய பல் வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.